New Smartphones In October: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் இது உங்களுக்கு ஏற்ற நேரம் என்பதை நாங்கள் உறுதியாக சொல்கிறோம். அமேசான், பிளிப்கார்ட் என இரண்டு பெரிய நிறுவனங்களும் பல ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி விற்பனையை இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளன. எனவே, அதில் எந்த ஸ்மார்ட்போனை வாங்குவது என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், இந்த அக்டோபரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள 5 ஸ்மார்டோபன்களும் சிறந்த தேர்வாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், அந்த 5 ஸ்மார்ட்போன்கள் குறித்தும், அதன் விலை குறித்தும் இதில் காணலாம். இந்த பட்டியலில் புதிய Google Pixel 8 Series மொபைல்கள் மற்றும் Vivo V29 Series மொபைல்கள்  ஆகியவை அடங்கும். இதுவரை இந்த மொபைல்கள் குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த போன்கள் அற்புதமான அம்சங்களைக் கொண்டிருக்கும் மற்றும் வடிவமைப்பும் அற்புதமாக இருக்கும் என நம்பலாம். எனவே, அதுகுறித்து இங்கு காணலாம். போன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.


Vivo V29 மற்றும் Vivo V29 Pro 


Vivo V29 Series வரும் அக். 4 அன்று வெளியிடப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த சீரிஸில் Vivo V29 மற்றும் Vivo V29 Pro என இரண்டு போன்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள் மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களைக் கொண்டிருக்கும். 


Vivo V29 பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு முன்னதாக பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இணையதளத்தில் உள்ள அந்த மொபைலின் படங்கள் அல்ட்ரா ஸ்லிம் வளைந்த காட்சியை காட்டியுள்ளன. பிளிப்கார்ட்டில் வெளியிடப்பட்ட படங்களின்படி, தொலைபேசியின் பின்புற பேனல் நீல நிறத்தில் உள்ளது. இதில், இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் Vivo நிறுவனத்தின் சிக்னேச்சர் ரிங் லைட் கொண்ட கேமரா பேக்கேஜ்ஜையும் காட்டுகிறது. இது Vivo V27 Pro மொபைலிலும் காணப்படுகிறது. 


Vivo V29 ஆனது 120Hz Refresh Rate உடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். Snapdragon 778G சிப்செட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோன் மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இது மற்ற வேறு அம்சங்களுடனும் வரலாம். இந்த சாதனத்தில் 50 MP முதன்மை கேமரா இருக்கலாம்.


மேலும் படிக்க | கேமிங் பிரியரா நீங்கள்... அமேசானில் 40% தள்ளுபடி - இந்த மூன்று லேப்டாப்களை பாருங்க!


Samsung Galaxy S23 FE


Samsung Galaxy S23 FE மொபைலின் அதிகாரப்பூர்வ வெளியீடு அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 6.4-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 50 MP + 8 MP + 12 MP கேமரா சென்சார்கள் இருக்கலாம். முன் கேமராவில் 10 MP சென்சார் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த மொபைலில் 4500 mAh பேட்டரி இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. Samsung நிறுவனத்தின் Exynos 2200 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த மொபைலின் விலை ரூ.55 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.


Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro


Google Pixel 8 Series மொபைல்கள் அக்டோபர் 4 ஆம் தேதியும், பிளிப்கார்டில் முன்பதிவு அக்டோபர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்தத் சீரிஸில் Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும். இதுவரை வெளியான தகவல்களின்படி, Google Pixel 8 மொபைல் 6.17 இன்ச் முழு HD AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz refresh rate உடன் மற்றும் 2400x1080 பிக்சல் தெளிவுத்திறனுடன் வரும். Google Pixel 8 Pro மொபைல் 3120x1440 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். 


இரண்டு ஸ்மார்ட்போன்களும் 50 MP முதன்மை பின்புற கேமராவுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Google Pixel 8 ஆனது Sony IMX386 சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம், இது அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷாட்களுக்குப் பயன்படுத்தப்படலாம். Google Pixel 8 Pro 64 MP மற்றும் 48  MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. Google Pixel 8 மொபைலின் விலை சுமார் 70 ஆயிரத்து 200 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் Google Pixel 8 Pro மொபைலின் ஆரம்ப விலை சுமார் 96 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கலாம்.


மேலும் படிக்க | உங்கள் இன்ஸ்டா ரீல்ஸ் வைரல் ஆக வேண்டுமா...பணமும் அள்ளலாம்! - இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ