இரத்த அழுத்தத்தை நிகழ்நேரத்தில் கண்கானிக்கும் VivoWatch BP!
ஆரோக்கிய கருத்தியலின் அடிப்படையில் ASUS நிறுவனம் தற்போது VivoWatch BP என்னும் இரத்த அழுத்த கண்கானிப்பானை அறிமுகம் செய்துள்ளது!
ஆரோக்கிய கருத்தியலின் அடிப்படையில் ASUS நிறுவனம் தற்போது VivoWatch BP என்னும் இரத்த அழுத்த கண்கானிப்பானை அறிமுகம் செய்துள்ளது!
பிரபல கணினி வன் பொருள் உற்பத்தி நிறுவனமாக ASUS தற்போது புதிய கைகடிகாரம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கடிகாரம் மூலம் பயனர்கள் தங்களது இரத்த அழுத்தத்தினை நிகழ் நேரத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
வெறும் 15 நொடிகளில் நம் உடலில் இருந்து விவரங்களை பெற்று, இரத்த அழுத்த அளவினை தெரியப்படுத்தும் இந்த Vivo Watch BP-னை செயல்படுத்த ECG (எலக்ட்ரோ காட்டியோ தெரோப்பி) மற்றும் PPG (போட்டோப்ளதெம்ஸ் கிராப்பி) யுக்திகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 15 நொடிகளில் இரத்த அழுத்த அளவினை கண்டறிந்து பயனரின் கையில் பொருத்தப்பட்டுள்ள மெட்டல் கடிகார திரையில் காண்பிக்கும் என ASUS தெரிவித்துள்ளது.
மேலும் சில சிறப்பம்சங்களாக இந்த கைகடிகாரத்தில், ஆரோக்கியம் குறித்த குறிப்புகள், இதய துடிப்பு அளவை, உறக்கத்தின் திறன் அளவீடு, மன அழுத்த அளவு போன்றவற்றினையும் காண்பிக்கின்றது.
இந்த கைகடிகார தயாரிப்பு நிறுவனம் இதனை மேலும் மேம்படுத்தும் செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போது இருக்கும் அளவினை விட 70%-லிருந்து 50% வரையில் அளவினை குறைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த கைகடிகாரம் தாய்வானில் முதலாவதாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை $169 (இந்திய மதிப்பில் 11,401 ரூபாய) என மதிப்பிடப்பட்டுள்ளது!