ஏடிஎம் ( ATM - Automated Teller Machine) பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், எப்போது வேண்டும்னானாலும் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஏடிஎம்மில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். ஆனால் ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத் தவிர வேறு பல விஷயங்களைச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா... வங்கி தொடர்பான பிற பணிகளை ஏடிஎம் மூலம் மேற்கொள்ளலாம். இது குறித்து அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு டெபிட் கார்டில் இருந்து மற்றொரு டெபிட் கார்டுக்கு பணத்தை மாற்றலாம் (Card to Card Money Transfer)


ஏடிஎம்மில் உங்கள் எஸ்பிஐ டெபிட் கார்டில் இருந்து வேறு கார்டுக்கு பணத்தை மாற்றலாம். இதன் மூலம் தினமும் ரூ.40 ஆயிரம் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம். வங்கி இதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இதற்கு நீங்கள் யாருக்கு பணம் மாற்ற விரும்புகிறீர்களோ அந்த நபரின் கார்டு எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு கார்டில் இருந்து மற்றொரு அட்டைக்கு பணத்தை மாற்ற இது எளிதான வழியாகும்.


ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம் (Money Transfer To Another Account)


ஏடிஎம் உதவியுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்கிற்கும் பணத்தை மாற்றலாம். இதற்கு நீங்கள் அனுப்ப வேண்டிய நபரின் கணக்கை உங்கள் ஏடிஎம் கார்டுடன் இணைக்க வேண்டும். ஒரு ஏடிஎம் கார்டுடன் அதிகபட்சம் 16 கணக்குகளை இணைக்க முடியும். உங்கள் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்ப இது ஒரு பாதுகாப்பான வழியும் கூட.


விசா கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் (VISA Credit Card Payment)


ஏடிஎம்மிற்குச் சென்று எந்த விசா கிரெடிட் கார்டு பில் தொகையையும் செலுத்தலாம். கிரெடிட் கார்டு பில் செலுத்த, உங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.


கணக்கு இருப்பு ( (Account Balance and Mini Statement)


ஏடிஎம்மிற்குச் சென்று உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவும். ஏடிஎம்மில் இருந்து மினி ஸ்டேட்மென்ட் எடுப்பதன் மூலம் நீங்கள் சமீப காலத்தில் என்னென்ன பரிவர்த்தனை செய்தீர்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். மினி ஸ்டேட்மென்ட் மூலம் கடைசி 10 பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | ஏர்டெல் வழங்கும் பட்ஜெட் பிளான்... தினசரி 3ஜிபி டேட்டாவுடன்... அமேசான் பிரைம் இலவசம்


ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல்


ஏடிஎம் மூலம் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தையும் செலுத்தலாம். எல்ஐசி, ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் எஸ்பிஐ லைஃப் போன்ற பல காப்பீட்டு நிறுவனங்கள் ஏடிஎம்கள் மூலம் பிரீமியம் செலுத்த வங்கிகளுடன் இணைந்துள்ளன. பிரீமியம் செலுத்தும் இந்த முறை பாதுகாப்பானது. இந்த வசதியைப் பெற, உங்களிடம் ஏடிஎம் கார்டு இருந்தால் போதும், பாலிசி எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஏடிஎம் பின்னை மாற்றலாம் (Changing ATM PIN)


பாதுகாப்பு காரணங்களுக்காக, உங்கள் ஏடிஎம் கார்டின் பின்னை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். PIN எண்ணை மாற்றும் வசதியையும் ATM வழங்குகிறது. இணைய மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பிற்காக கார்டின் பின் எண்ணை அவ்வப்போது மாற்றுமாறு அறிவுறுத்துகின்றன.


புதிய காசோலை (Cheque Book Request)


புதிய காசோலை புத்தகம் வேண்டுமானால், இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த வேலையை ஏடிஎம் மூலமாகவும் செய்யலாம். அருகிலுள்ள ஏடிஎம்மிற்குச் சென்று புதிய காசோலைப் புத்தகம் அனுப்புவதற்கான கோரிக்கையை அனுப்பகாம். ஆனால் காசோலை புத்தகம் வங்கியில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


மொபைல் வங்கி சேவைக்கான பதிவு (Registration for Mobile Banking)


பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கணக்கைத் தொடங்கியவுடன் இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி வசதிகளை வழங்குகின்றன. எனினும், உங்கள் மொபைல் பேங்கிங் சேவை ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், இந்த வேலையை ஏடிஎம் உதவியுடன் செய்யலாம்.


மேலும் படிக்க | ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ