இனி UPI பயன்பாட்டின் மூலம் ATM இல் இருந்து பணத்தை எடுக்கலாம்! முழு விவரம் இங்கே!
ATM தயாரிப்பாளர் சமீபத்தில் UPI அடிப்படையிலான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளார்
புதுடெல்லி: ATM இல் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டு (Debit Card) இனி தேவையில்லை. யுபிஐ ஆப் (UPI App) மூலம் கியூஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் ATM இல் இருந்து பணத்தையும் எடுக்கலாம். இதற்காக, ATM நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் சமீபத்தில் சிறப்பு UPI இயங்குதளத்தின் அடிப்படையில் முதல் ICCW தீர்வை அறிமுகப்படுத்தியது.
ATMs மேம்படுத்தப்படுகின்றன
சிட்டி யூனியன் வங்கி (Citi Union Bank) என்.சி.ஆர் கார்ப்பரேஷனுடன் (NCR Corporation) கைகோர்த்துள்ளது. இதுவரை, 1500 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பல இடங்களில் விரைவான மேம்படுத்தல் பணிகள் நடந்து வருகின்றன.
Also Read | முந்துங்கள் வெறும் 200-க்கு முன்பதிவு! Paytm LPG கேஷ்பேக் சலுகை
புதிய ATM இல் இருந்து பணத்தை எடுப்பது எப்படி
புதிய ATM இல் இருந்து பணத்தை எடுக்க, முதலில் நீங்கள் ஸ்மார்ட்போனில் எந்த யுபிஐ பயன்பாட்டையும் (GPay, BHIM, Paytm, Phonepe, Amazon) திறக்க வேண்டும். இதற்குப் பிறகு, ATM திரையில் காட்டப்படும் QR code ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேனிங் முடிந்ததும், நீங்கள் எடுக்க வேண்டிய பணத்தை உள்ளிட வேண்டும், பின்னர் Proceed இன் பொத்தானை அழுத்தவும். இதற்குப் பிறகு உங்களிடம் 4 அல்லது 6 இலக்க UPI PIN கேட்கப்படும், நீங்கள் அதை அதில் உள்ளிடவுடன் ATM இல் இருந்து பணம் பெறுவீர்கள். ஆரம்பத்தில், இதில் நீங்கள் 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுக்க முடியும்.
UPI என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது?
Unified Payments Interface ஒரு நிகழ்நேர கட்டண முறையாகும், இந்த மொபைல் பயன்பாட்டின் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை மாற்ற முடியும். இதற்காக, உங்கள் வங்கிக் கணக்கை UPI பயன்பாட்டுடன் இணைக்க வேண்டும். நீங்கள் ஒரு UPI பயன்பாட்டின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம் மற்றும் நொடிகளில் நிதியை மாற்றலாம்.
UPI கணக்கை நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம்
UPI கணக்கை உருவாக்க மேலே குறிப்பிட்டுள்ள எந்த பயன்பாடுகளையும் நீங்கள் பதிவிறக்கலாம். இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு அதில் பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் கணக்கை அதில் சேர்க்க வேண்டும். ஒரு கணக்கைச் சேர்த்த பிறகு, உங்கள் வங்கியின் பெயரை இங்கே தேட வேண்டும். வங்கியின் பெயரைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கணக்கைச் லிங்க் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, பணம் செலுத்த உங்கள் ஏடிஎம் கார்டின் விவரங்களை உள்ளிட வேண்டும். அதைக் கொடுப்பதன் மூலம், உங்கள் UPI கணக்கு உருவாக்கப்பட்டது.
ALSO READ | SBI YONO வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. இந்த சிறப்பு சலுகை வெறும் 4 நாட்கள் மட்டுமே!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR