பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக ஆடி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டீசல் உமிழ்வு சோதனை ஏமாற்றல் விவகாரத்தில் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்பதன் காரணமாக இவர் கைது செய்யப்பட்டதாக ஜெர்மனி சேர்ந்த சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை இவர் அழித்து விடுவார் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆடம்பரக் கார் பிராண்ட் வோல்க்ஸ் வேகன் ஆடி கார் டீசல் வெளியேற்றத்தில் பொய் கூறி ஏமாற்றியதாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கில் சட்டவல்லுநர்கள் தங்கள் விசாரணைப் பரப்பை அதிகரித்தனர். இதனையடுத்து பொய்விளம்பரம், மோசடி என்று ஸ்டாட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


டீசல் உமிழ்வு சோதனை ஏமாற்றல் பிரச்சனை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே சர்சைகள் கிளம்பியது, எனினும் இதனை மறைப்பதற்காக தங்களது கார்களில் ப்ரத்தியேக கருவிகளைப் பொருத்தியதாகக் இந்நிறுவனத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


முதன் முதலில் இந்த ஏமாற்றுக்கருவிகள் வோல்க்ஸ் வேகன் கார்களில் பொறுத்தப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னரே ஆடம்பர வாகனமான ஆடிகாரிலும் இந்த டீசல் புகை வெளியேற்ற தரவு மறைப்புக் கருவி பொருத்தப்பட்டது தெரியவந்தது.


அமெரிக்காவில் விற்கப்பட்ட சுமார் 6 லட்சம் வோல்க்ஸ்வேகன் கார்களில் டீசல் புகை வெளியேற்ற மறைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் உலகம் முழுதும் 11 மில்லியன் கார்களில் பொருத்தப் பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.