கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் விதிக்கப்பட்ட பூட்டுதல்கள் இப்போது படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கையை மீண்டும் புதிய பாதையில் அழைத்து செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வரிசையில், பூட்டுதல் தளர்த்தப்பட்ட பின்னர் தெற்கு டச்சு நகரமான மாஸ்ட்ரிக்டில் உள்ள தாதவன் உணவகத்தில் இதுபோன்ற ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவகத்தில் சமூக இடைவெளியை பராமரிக்க உணவகங்களில் ரோபோக்கள் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 3 ரோபோக்களின் உதவியால் இங்கு வாடிக்கையாளர்களுக்கு பானங்கள் பரிமாறப்படுகிறது.


READ | பத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த Microsoft நிறுவனம்.. இனி ரோபோ பணி புரியும்...


ஆமி, அகர் மற்றும் ஜேம்ஸ் என்ற இந்த 3 ரோபோக்களின்பணி தற்போது அப்பகுதி மக்களிடையே பேச்சுப்பொருளாய் உள்ளது. ஃப்யூஷன் உணவகத்தில் சுற்றிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பானங்களைக் கொண்டு வரும் இந்த ரோபோக்கள் தற்போதை தலைப்பு செய்தியில் இடம்பிடித்துள்ளன. 


எனினும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டதால் ஊழியர்களின் பணி இங்கு பறிக்கப்படவில்லை. மாறாக ஊழியர்களுக்கான ஓய்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம், இந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி வாடிக்கையாளர்களை நோக்கி நகரவேண்டாம் என்பதால் அவர்களுக்கு சிறிது ஓய்வு கிடைப்பதாக உணவக நிர்வாகம் தெரிவிக்கிறது.


இந்த உணவகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ரோபோவின் வடிவமும் மனிதர்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கையில் பரிமாறும் தட்டு, முகத்தில் புன்னகை என வாடிக்கையாளர்களை மட்டும் அல்ல அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.


READ | செக்ஸ் ரோபோ எழுச்சி: ரோபோ விபச்சாரம் நிதி ஆதரவு தோல்வி....


ரோபோ சர்வர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை உலகெங்கிலும் உள்ள உணவகங்களுக்கு சென்றடையவில்லை. அதேவேளையில் டச்சு உணவகத்தில் இருக்கும் ரோபோ சர்வர்கள் தனித்துவமானவை. இந்த ரோபோக்களின் சேவை தற்போது ஒரு சில டச்சு உணவகங்களில் மட்டுமே கிடைக்கிறது.


தற்போது தாதவனின் ரோபோ-சேவை வெறும் பானங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, எனினும் உணவக உரிமையாளர்கள் விரைவில் ரோபோக்களின் வரம்பை விரிவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.