Xiaomi-ன் சூப்பரான பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
சியோமி (Xiaomi) சூப்பரான பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது. 499 ரூபாய்க்கு நீங்கள் பழைய பேட்டரியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
Xiaomi நிறுவனம் இந்தியாவில் அதன் Xiaomi மற்றும் Redmi பிராண்டட் ஸ்மார்ட்போன்களுக்கு பேட்டரி மாற்றும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் யூசர்கள் தங்கள் தொலைபேசியின் குறைபாடுள்ள மற்றும் பழைய பேட்டரியை அதிகாரப்பூர்வ மேற்பார்வையின் கீழ் குறைந்த செலவில் மாற்றிக் கொள்ளலாம். எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் பேட்டரி மிக முக்கியமான பகுதி என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் இது இல்லாமல் தொலைபேசி ஒரு நாள் கூட இயங்காது.
மேலும் படிக்க | Smartphone Hacking: ஹேக்கர்களை அழைப்பது நீங்கள் தான் - ஸ்மார்ட்போன் எச்சரிக்கை
அப்படியான பேட்டரி பிரச்சனை என்றால், நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் அல்லது குறிபிட்ட நிறுவனத்தின் டீலரிடம் சென்று போன் பேட்டரியை மாற்றிக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு சிறந்த பேட்டரி அனுபவத்தைக் கொடுக்கும். மாறாக, அங்கீகரிப்படாத கடைகளில் பேட்டரியை வாங்கினால், உங்களின் போன் பேட்டரி விரைவில் பிரச்சனைகளை சந்திக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், நீங்கள் கடுப்பாகவும் செய்வீர்கள். இது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பானாலோர் எதிர்கொள்ளும் பிரச்சனை. பணத்தை மனதில் வைத்து மோசமான பேட்டரியை வாங்குகிறார்கள். இந்நிலையில், சியோமி நிறுவனம் பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது.
குறைந்த செலவில் அதாவது, வெறும் 499 ரூபாய்க்கு தரமான பேட்டரியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். சியோமி நிறுவனம் மூலம் நீங்கள் பேட்டரியை பெற விரும்பினால், வீட்டில் இருந்துகூட உங்களுக்கான தரமான பேட்டரியை வரவழைக்கலாம். முதலில், அருகிலுள்ள Xiaomi அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பேட்டரி இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு Xiaomi's Service+ ஆப்ஸ் மூலமாகவும் வீட்டில் இருந்தே அப்பாயிண்ட்மெண்ட்களையும் பதிவு செய்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க | 528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள்
முன்பதிவு செய்து முடித்தவுடன், உங்களுக்கான பிரத்யேக நேரம் மற்றும் தேதி கொடுக்கப்படும். அந்த நேரத்தில் சியோமி நிறுவனத்தின் சேவை மையத்துக்கு சென்று பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். பேட்டரியை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனுபவம் அதிகரிக்கும். பழைய பேட்டரியால் ஏற்படும் அளவுக்கதிகமான சூடு உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். இவற்றை கருத்தில் கொண்டு புதிய பேட்டரியை வாங்குவதற்கான சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR