Best Smartphones in Flipkart: ஸ்மார்ட்போன்களின் விலை என்பது ரூ .5 ஆயிரம் முதல் ரூ .1 லட்சத்திற்கும் அதிகமான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு தொலைபேசியும் விலைக்கு ஏற்ப அதன் அம்சங்கள் மாறுபடுகிறது. நமது கையில் இருக்கும் பணத்தை பொறுத்து எந்த விலைப்பிரிவு போனை வாங்கலாம் என்பதை முடிவு செய்கிறோம். ஆனால் புதிய மற்றும் நல்ல அம்சங்களை கொண்ட சில ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்கலாம். இன்று 8000 ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் சில தொலைபேசிகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்த ஸ்மார்ட்போன்களில் 4 ஜிபி ரேம், பெரிய டிஸ்ப்ளே மற்றும் வலுவான பேட்டரி போன்ற அம்சத்துடன் கிடைக்கிறது. அத்தகைய ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைக்ரோமேக்ஸ் இன் 2பி (Micromax IN 2B):
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பை (Internal Storage) வழங்கும் மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இருந்து ரூ .7999 க்கு வாங்கலாம். மேலும் இது 256 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்டு ஆதரவையும் கொண்டுள்ளது. இது 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh திறன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. இந்த போனில் பின்புற பேனலில் 13+2 மெகாபிக்சல் கேமரா அமைப்பு உள்ளது, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதற்கு ARM Cortex A75 Octa கோர் செயலி கொடுக்கப்பட்டுள்ளது.


ஜியோனி எஸ்11 லைட் (Gionee S11 Lite):
ஜியோனி எஸ்11 லைட் தொலைபேசியை Flipkart இலிருந்து வாங்கலாம். இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இந்த ஃபோன் 256 ஜிபி எஸ்டி மைக்ரோ கார்டு ஆதரவுடன் வருகிறது. இது 5.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பின்புற பேனலில் 13 + 2 மெகாபிக்சல் கேமரா அமைப்பு உள்ளது, அதே நேரத்தில் 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் மற்றும் 3030 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.


ALSO READ | Android New Feature: இனி உங்கள் முகபாவங்களைக் கொண்டு உங்கள் மொபைல் போனை இயக்கலாம்


ஐ கால் கே570 (iKall K570):
ஐ கால் கே570 என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட்போனும் Flipkart இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 7599 ரூபாய். இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. மேலும், இந்த போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 4000mAh திறன் பேட்டரி உள்ளது. பின்புற பேனலில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் AI சென்சார் உள்ளது, அதே நேரத்தில் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.


போக்கோ சி3 (POCO C3):
போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ரூ. 8000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. ஆனால் இதில் 4 ஜிபி ரேம் கிடைக்காது, 3 ஜிபி ரேம் வசதி கொண்ட போன் கிடைக்கும். இதுவும் Flipkart தளத்தில் கிடைக்கும். இந்த போனின் விலை ரூ .7999. இதில் 32 ஜிபி மெமரி உள்ளது. இந்த போன் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 செயலியுடன் வருகிறது.


ALSO READ | Poco M3 Pro 5G: அட்டகாச அம்சங்கள், நம்ப முடியாத விலை, இந்தியாவில் Poco-வின் புதிய போன் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR