Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள் இதோ
Best E Bikes in India: இன்று இந்தியாவில் இருக்கும் சில சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவின் டாப் மின்சார பைக்குகள்: நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது மக்கள் மின்சார வாகனங்களை அதிகம் விரும்புகிறார்கள். நீங்களும் ஒரு நல்ல எலக்ட்ரிக் பைக்கை வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கான செய்தியாக இருக்கும்.
இன்று இந்தியாவில் இருக்கும் சில சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பைக்குகள் சக்திவாய்ந்த பேட்டரி பேக் மற்றும் சிறந்த டிரைவிங் ரேஞ்சை அளிக்கின்றன.
இக்னிடிரான் மோடோகார்ப்பின் சமீபத்தில் அறிமுகமான மின்சார பைக்கான சைபோர்க் ஜிடி-120 -யில் 4.68 kWH லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 125 கிமீ வேகத்தில் 180 கிமீ வரை செல்லும். புதிய சைபோர்க் ஜிடி-120 மூன்று டிரைவிங் முறைகளில் வருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு இந்த பைக் 0 முதல் 40 கிமீ தூரத்தை 2.5 வினாடிகளில் கடக்கும். ஜியோ லோகேட் / ஜியோ ஃபென்சிங், யூ.எஸ்.பி சார்ஜிங், ப்ளூடூத், கீலெஸ் இக்னிஷன் போன்ற பல சிறப்பான அம்சங்களை இந்த பைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 1.5 லட்சம் ரூபாய் இருக்கும்.
மின்சார வாகன உற்பத்தியாளரான டார்க் மோட்டார்ஸ் சமீபத்தில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக் ரேஞ்சை அறிமுகப்படுத்தியது. இதில் டார்க் க்ராடோஸ் மற்றும் டார்க் க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன. இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.02 லட்சமாகும். இது மானியத்துடன் இணைக்கப்பட்டுள்ள டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மோட்டார் சைக்கிளில் 48V சிஸ்டம் மின்னழுத்தத்துடன் IP67-மதிப்பிடப்பட்ட 4 Kwh லித்தியம்-அயன் பேட்டரி பேக் உள்ளது. இது மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக் 180 கிமீ ஐ.டி.சி வரம்பைக் கொண்டுள்ளது.
ALSO READ | ஒருமுறை சார்ஜ் 180 கிமீ தூரம் பயணம்! வெறும் ரூ.999 செலுத்தி புதிய பைக்...
கோமகி ரேஞ்சர் க்ரூஸர் மின்சார பைக்கில் 4kW பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180-220 கிமீ வரை செல்ல முடியும். கார்னெட் ரெட், டீப் ப்ளூ மற்றும் ஜெட் பிளாக் ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,68,000 ஆகும். ரேஞ்சரை இயக்க, 4000 வாட் மோட்டார் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரிவோல்ட் ஆர்.வி 400-ஐ ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லும். இதன் பேட்டரி 4.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. ஆகும். இதில் இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. கிலோமீட்டர் கணக்கில் பார்த்தால், இந்த எலக்ட்ரிக் பைக்-கின் விலை 100 கிலோமீட்டருக்கு 9 ரூபாய் மட்டுமே என்று நிறுவனம் கூறுகிறது. இதன் விலை ரூ.90,799 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.
ALSO READ | 1 முறை சார்ஜ் செய்தால் 200 KM போகலாம்; அற்புதமான பைக்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR