Bike Maintenance: குளிர் காலத்தில் பைக் ஓட்ட உதவும் சில முக்கிய குறிப்புகள்

உங்கள் இரு சக்கர வாகனத்தை சிறந்த முறையில் கையாள, நீங்கள் தெளிவாகப் பார்ப்பது முக்கியமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 12:51 PM IST
  • குளிர்காலம் தொடங்கும் போது, ​​பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
  • இது வாகன ஓட்டிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.
  • வண்டி ஓட்டும்போது நல்ல ஹெல்மெட்டை அணிந்துகொள்வது மிக அவசியமாகும்.
Bike Maintenance: குளிர் காலத்தில் பைக் ஓட்ட உதவும் சில முக்கிய குறிப்புகள் title=

Two Wheeler Tips for Winters: குளிர்காலம் தொடங்கும் போது, ​​பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளில் பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜமாகும். குளிர்காலத்தில் உலோகங்கள் சுருங்குகின்றன. ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளில் இரும்பு பாகங்கள் அதிகமாக இருப்பதால் அவற்றில் பிரச்சனை ஏற்படுகின்றது. எனவே குளிர்காலத்தில் அவற்றின் செயல்திறனில் வித்தியாசம் ஏற்படுகிறது. 

இது வாகன ஓட்டிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் குளிர்கால (Winters) சாலைப் பயணத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், சவாரி செய்யும் விதத்தை பாதிக்கும் சில விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. இந்த குளிர்கால சவாரி குறிப்புகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வண்டியை ஓட்ட உதவும். 

நல்ல ஹெல்மெட்டை அணியவும்

உங்கள் இரு சக்கர வாகனத்தை சிறந்த முறையில் கையாள, நீங்கள் தெளிவாகப் பார்ப்பது முக்கியமாகும். உங்கள் ஹெல்மெட் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தால், அது வானிலை பாதுகாப்பு திறனை இழந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் குளிர் காற்று வாகனத்தை ஓட்டும் நபரின் முகத்தைத் தாக்கக்கூடும். இது அதிக அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது, கவனத்தை சிதறடிகிறது. 

ஆகையால் வண்டி ஓட்டும்போது நல்ல ஹெல்மெட்டை அணிந்துகொள்வது மிக அவசியமாகும்.

ALSO READ: Best Bikes: மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் இந்தியாவின் டாப் பைக்குகள் 

உங்கள் கைகளை உங்கள் பாக்கெட்டில் வைக்க வேண்டாம்

பெரும்பாலான இரு சக்கர வாகன (Two Wheelers) ஓட்டிகள் குளிரில் ஒரு கையை பாக்கெட்டில் வைத்து ஒரு கையால் பைக்கை ஓட்டுகிறார்கள். இதலனால், பல சமயங்களில் திடீரென சாலைகளில் உள்ள பள்ளங்களிலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் பைக்கைக் கட்டுப்படுத்துவதிலலோ சிரமம் ஏற்படலாம். பைக் ஓட்டும் போது கைகளை பாக்கெட்டில் வைக்காமல் இருக்க கையுறைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

டயர்களை கவனித்துக்கொள்ளுங்கள்

நாம் நடக்கும் போது நமது கால்களுக்கு நல்ல பிடிமானம் அவசியமாக இருப்பதுபோல, மோட்டார் சைக்கிளிலும் (Motor Cycles) நல்ல டிரெட் டயர் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் டயர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் ஓடியிருந்தால், அவற்றின் பிடி மோசமான நிலையில் இருக்க வாய்ப்புண்டு. டயரின் மோசமான பிடிப்பு காரணமாக, குளிரில் பிரேக் போடும் போது பைக்கை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் பைக் நழுவக்கூடும். எனவே, அத்தகைய டயர்களின் பிடி நன்றாக இருக்கும் வரை மட்டுமே பயன்படுத்தவும்.

பனி அதிகமாக இருந்தால் இப்படி செய்யலாம் 

அடர்த்தியான மூடுபனி ஓட்டுனரின் சாலை பார்வையை வெகுவாகக் குறைக்கும். வாகனம் ஓட்டுவது கடினமாக இருந்தால், பனி விலகும் வரை காத்திருக்கவும். உங்களால் காத்திருக்க முடியாவிட்டால், உங்கள் ஹெட்லைட்கள்/மூடுபனி விளக்குகளை, அபாய விளக்குகளை ஆன் செய்யவும். இதனால் மற்ற ஓட்டுனர்கள் உங்களை தூரத்திலிருந்து பார்க்க முடியும்.

ALSO READ: நீண்ட நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் Bike ஓடிக்கிட்டே இருக்கும்: டிப்ஸ் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News