புதுடெல்லி: இந்த தீபாவளியில் மாருதி கார் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மாருதி சுஸுகி காரின் புதிய பதிப்பான மாருதி சுஸுகி செலிரியோ நவம்பர் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதி சுஸுகி (Maruti Suzuki) செலிரியோ நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த காரின் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.


இந்த காரை இந்த வழியில் முன்பதிவு செய்யலாம்


ஹரியானாவில் உள்ள மானேசர் ஆலையில் புதிய செலிரியோ காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், செலிரியோவின் புதிய பதிப்பை ரூ.11,000 டோக்கன் தொகையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.marutisuzuki.com/-க்குச் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட மாருதி ஷோரூமிலும் கார் முன்பதிவு செய்யலாம்.


ALSO READ: Cheapest SUV: அசத்தலான டாப் கார்களின் விலை, அம்சங்களின் முழுமையான ஒப்பீடு 


மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் கார்


நாட்டிலேயே மிக அதிக மைலேஜ் (Mileage) அளிக்கும் காராக இது இருக்கும் என மாருதி நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, செலிரியோ 26 kmpl வரையிலான சிறந்த மைலேஜை அளிக்கும். இந்திய ஆட்டோ சந்தையில், இந்த கார் Datsun Go, Tata Tiago மற்றும் Hyundai Santro போன்ற கார்களுடன் போட்டியில் இறங்கும்.


செலிரியோ காரின் தற்போதைய மாடலில், புளூடூத் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல், இருக்கை உயரம் சரிசெய்தல், பவர் விண்டோ மற்றும் மேனுவல் ஏசி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் அதிக கேபின் இடமும் கிடைக்கிறது.


செலிரியோ காரின் புதிய மாடல், தற்போதைய மாடலை விட பெரியதாக இருக்கும். இது முன்பை விட அதிக இடவசதியை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. இது சிறப்பான தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


செலிரியோ காருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது என்று மாருதி சுஸுகி இந்தியாவின் மூத்த செயல் இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இந்த கார் (Car) சந்தையில் நல்ல இடத்தை பிடித்துள்ளது என்றார் அவர். மேலும், இப்போது புதிய பெட்ரோல் எஞ்சின், பிரத்யேக வடிவமைப்பு மற்றும் செக்மண்ட் ஃபர்ஸ்ட் அம்சங்களுடன், செலிரியோவின் புதிய மாடல் மீண்டும் காம்பாக்ட் செக்மெண்டுல் புத்துணர்ச்சியைக் கொண்டுவந்துள்ளது.


ALSO READ: மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் இந்தியாவின் டாப் 5 கார்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR