பவர் பேங்க் வாங்க ஐடியா இருக்கா... அமேசானில் விற்பனையாகும் சிறந்த மாடல்கள் இதோ!
Best Power Bank: அமேசானின் தள்ளுபடி விற்பனையில் தற்போது கிடைக்கும் சிறந்த சில பவர் பேங்க் மாடல்களை இங்கு காணலாம். அதன் விலையையும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Amazon Sale 2023, Power Bank: பவர் பேங்க் என்பது அவசர தேவைக்கு என்பது மாறி அது அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போன், டேப்லட் போன்ற சாதனங்களில் வேகமாக சார்ஜ் தீர்ந்துவிடும் சமயத்தில், எளிதாக சார்ஜ் செய்ய வழியில்லாத இடங்களில் பவர் பேங்க்தான் உதவிகரமாக இருக்கும்.
இது முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போதோ அல்லது சுற்றுலாவுக்கு மலை, காட்டுப் பகுதிக்கு செல்லும்போதோ அல்லது ரயில், பேருந்து பயணிங்களுக்கோதான் சார்ஜ் பேங்க் அதிகம் தேவைப்பட்டது. ஆனால், முன்பு கூறியது போன்று தற்போது ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் செல்லும்போதெல்லாம் பவர் பேங்கையும் கொண்டு செல்கின்றனர்.
மேலும், உங்கள் மொபைலின் பேட்டரி குறைந்த நேரமே சார்ஜை வைத்துக்கொள்கிறது என்றால், புதிய மொபைல் வாங்க சிலர் யோசிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு பவர் பேங்க் வாங்கிக்கொண்டு அதையே எப்போதும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதில், நம்பகமான பவர் பேங்க் (Power Bank) மூலம், நீங்கள் எப்போதும் உப்கள் சாதனங்களை சார்ஜ் உடன் வைத்திருக்கலாம். நீங்கள் புதிய பவர் பேங்க் வாங்க திட்டமிட்டிருந்தால், தற்போது அமேசானின் சிறப்பு விற்பனையில் (Amazon Great Indian Festival Sale 2023) தள்ளுபடியுடன் கிடைக்கும் சில மாடல்களை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | 108 MP கேமரா 5ஜி போனுக்கு செம டீல்..! கேஷ்பேக் உண்டு
ரெட்மி (Redmi)
இந்த பவர் பேங்க், லித்தியம் - பாலிமர் (Li-Polymer) பேட்டரியுடன் வருகிறது. iPhone XS - 4.7 முறை, Redmi Note 7 - 3.5 முறை, Redmi K20 Pro - 3.5 முறை ஆகியவற்றால் சார்ஜ் செய்ய முடியும். இது 18W வேகமான சார்ஜிங் மற்றும் 5.1V/2.4A, 9V/ 2A MAX மற்றும் 12V/1.5A அதிகபட்ச சார்ஜிங் அவுட்புட்களை கொண்டுள்ளது. இதில் இரட்டை இன்புட் போர்ட்கள் (மைக்ரோ-USB/USB-C) மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங்குடன் கூடிய இரட்டை யூஎஸ்பி வெளியீடு உள்ளது. இந்த பவர் பேங்க் அமேசானில 1,899 ரூபாய்க்கு கிடைக்கிறது.
டுராசெல் ( Duracell)
இந்த பவர் பேங்க்கில் மூன்று சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களைத் தானாகக் கண்டறியும். இது 22.5W பவர் டெலிவரி, விரைவான சார்ஜிங், ஷார்ட் சர்க்யூட்களில் இருந்து அல்ட்ரா பாதுகாப்பு, அதிக மின்னழுத்தம் மற்றும் அதிக மின்னோட்டத்தைக் கொண்டிருக்கிறது. USB-C/மைக்ரோ-USB உள்ளீடு மற்றும் USB-A/USB-C அவுட்புட் உடன் வருகிறது. அமேசானில் இந்த பவர் பேங்க் 1,899 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஆம்பிரேன் (Ambrane)
இந்த பவர் பேங்க் விரைவு சார்ஜ் 3.0 மற்றும் பவர் டெலிவரி தொழில்நுட்பத்துடன் லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் வருகிறது. இது இரண்டு USB போர்ட்கள் கொண்டுள்ளது. இது சிப்செட் பாதுகாப்பின் பல அடுக்குகளுடன் வருகிறது. இந்த ஆம்பிரேன் பவர் பேங்க் 1,799 ரூபாய்க்கு கிடைக்கிறது
MI பவர் பேங்க் 3i (MI Power Bank 3i)
இந்த பவர் பேங்க் லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங், டிரிபிள் போர்ட் அவுட்புட் மற்றும் டூயல் இன்புட் போர்ட் (மைக்ரோ-யூ.எஸ்.பி/யூ.எஸ்.பி-சி) 6.9 மணிநேர சார்ஜிங் நேரத்துடன் வருகிறது. இது ஸ்மார்ட் பவர் மேனேஜ்மென்ட் உடன் மேம்பட்ட 12-லேயர் சிப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. MI பவர் பேங்க் 3i தற்போது அமேசான் விற்பனையில் 1,879 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அமேசான் பேஸிக்ஸ் (Amazon Basics)
இதன் பவர் பேங்கின் லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் சாதனங்களை பல முறை சார்ஜ் செய்ய முடியும். இது மைக்ரோ USB அல்லது Type C கேபிளைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். 5V மற்றும் 2.4A இன் இரண்டு அவுட்புட் உடன் 12W அதிகபட்ச சக்தியுடன் வேகமாக சார்ஜ் செய்யப்படுகிறது. அதன் நான்கு அடுக்கு சுற்று பாதுகாப்பு என்பது அதிக சார்ஜ், அதிக வெப்பம் மற்றும் குறுகிய சுற்றுகளில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. பவர் பேங்கை டைப்-சி கேபிள் மூலம் எளிதாக சார்ஜ் செய்யலாம். இந்த பவர் பேங்க் 1,199 ரூபாய்க்கு கிடைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ