புது டெல்லி: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து அற்புதமான விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சில திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, எல்லா நிறுவனங்களுக்கும் தனித்தனி டேட்டா வவுச்சர்கள் உள்ளன, ரீசார்ஜ் செய்வதன் மூலம் கூடுதல் டேட்டவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய அறிக்கையில், ஏர்டெல், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மிகவும் விலையுயர்ந்த தரவுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


ALSO READ: Airtel Black: ஏர்டெலின் இந்த ரீச்சார்ஜில் கிடைக்கும் பல நன்மைகள் 


ஜியோவின் ரூ .3,499 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருட செல்லுபடியாகும் ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வருடாந்திர திட்டத்தை நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் இரண்டிலும் காண முடிகிறது. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் ஜியோ பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான சந்தாக்களுடன் வருகிறது.


ஜியோ 4 ஜி ₹ 2599 திட்டம்
ஜியோவின் (Jio) இந்த திட்டத்தின் நன்மைகளை 365 நாட்களுக்கு ஆகும். இதில், நீங்கள் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அனைத்து ஜியோ செயலிகளின் விஐபி சந்தா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரையும் பெறுவீர்கள்.


வோடபோன்-ஐடியா ரூ 2,595 திட்டம்
Vi இன் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் 365 மற்றும் இதில் நீங்கள் 2GB டேட்டா மற்றும் 100 SMS மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியை தினமும் பெறுவீர்கள். OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஜீ 5 பிரீமியம் மற்றும் வி மூவிஸ் & டிவியை அணுகலாம்.


ஏர்டெல் ரூ .2,498 ப்ரீபெய்ட் திட்டம்
ஒரு வருடத்திற்கு இயங்கும் ஏர்டெல்லின் (Airtel) இந்த ரூ .2,498 திட்டத்தில், நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை அணுகலாம்.


ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR