Budget SUVs In India: எஸ்யூவி கார்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகின்றன, அவற்றின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நீங்களும் ஒரு SUV வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் பட்ஜெட் 10 லட்சம் ரூபாய் என்றால், என்ன கார் வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். சொகுசுக் கார்களில் விலை குறைவான கார் எது? எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் எஸ்யூவிகளின் பட்டியலைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த பிரத்யேகப் பட்டியலில் மஹிந்திரா தார் எஸ்யூவியும் இடம்பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10 லட்சம் ரூபாய்க்கு குறைவான டாப் 10 SUVகள்


டாடா பஞ்ச் (விலை - ரூ 6 லட்சம் முதல் ரூ 9.4 லட்சம் வரை)
Tata Nexon (விலை - ரூ 7.80 லட்சம் முதல் ரூ 14.35 லட்சம் வரை)
மாருதி பிரெஸ்ஸா (விலை - ரூ 8.19 லட்சம் முதல் ரூ 13.88 லட்சம் வரை)
ஹூண்டாய் வென்யூ (விலை - ரூ. 7.68 லட்சம் முதல் ரூ. 13.11 லட்சம்)
கியா சோனெட் (விலை - ரூ 7.69 லட்சம் முதல் ரூ 14.39 லட்சம் வரை)
ரெனால்ட் கிகர் (விலை - ரூ. 6.50 லட்சம் முதல் ரூ. 11.23 லட்சம்)
நிசான் மேக்னைட் (விலை - ரூ 5.97 லட்சம் முதல் ரூ 10.94 லட்சம் வரை)
மஹிந்திரா XUV300 (விலை - ரூ. 8.41 லட்சம் முதல் ரூ. 14.07 லட்சம்)
மஹிந்திரா பொலேரோ (விலை - ரூ. 9.78 லட்சம் முதல் ரூ. 10.79 லட்சம்)
மஹிந்திரா தார் (விலை - ரூ 9.99 லட்சம் முதல் ரூ 16.49 லட்சம் வரை)


மேலும் படிக்க | சலுகை விலையில் பெட்ரோல்! IOC - Kotak மஹிந்திராவின் எரிபொருள் கிரெடிட் கார்டு!


இந்த விலைகள் எக்ஸ் ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதில், மஹிந்திரா பொலிரோ மற்றும் தார் தவிர, அனைத்தும் 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகள். பொலேரோ 7 இருக்கைகள் கொண்ட கார். தார் 4 இருக்கைகள் கொண்டது.


மைக்ரோ எஸ்யூவி பிரிவில் வருகிறது டாடா பஞ்ச், மீதமுள்ள எஸ்யூவிகள் 4-மீட்டர் எஸ்யூவி பிரிவைச் சேர்ந்தவை. பஞ்ச் தவிர, மற்ற அனைத்து எஸ்யூவிகளின் டாப் வேரியன்ட்களின் விலை ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ளது. மஹிந்திரா பொலேரோ மற்றும் மஹிந்திரா தார் ஆகிய இரண்டின் அடிப்படை வகைகளின் விலையும் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாகும்.


மேலும் படிக்க | Best SUV In India: ஹூண்டாய் க்ரெட்டாவின் எஸ்யூவிக்கு டஃப்ட் ஃபைட் கொடுக்கும் டாடா Curvv! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ