சந்தையில் உலவும் டூப்ளிகேட் ஐபோன்கள்.... வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்க மக்களே
ஐபோன் 16 போன்று போலிகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டிருப்பதால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம்.
ஐபோன் 16 மொபைல் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. ஐபோன் 16 போன்று போலிகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டிருப்பதால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மாடலை ஆப்பிள் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து மட்டுமே வாங்க முயற்சிக்கவும். மலிவாக வாங்கும் ஆசையில் வேறு உள்ளூர் கடைகளில் வாங்கும்போது, டூப்ளிகேட் ஐபோன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
நீங்கள் வாங்கும் ஐபோன் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேடா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது முற்றிலும் நியாயமானது. ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், ஒரிஜினலை போல அச்சு அசலாக இருக்கும் போலி ஐபோன்களும் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றை வேறுபடுத்துவதும் கடினம். எனவே, உங்கள் ஐபோன் ஒரிஜினலா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
சிரி (Siri)
ஐபோனில் காணப்படும் சிரி ஒரு மெய்நிகர் உதவியாளர் போல் செயல்படும். பவர் பட்டனைப் பிடித்து 'Hey Siri' என்று சொல்லுங்கள், சிரி பதிலளிக்கவில்லை என்றால், உங்கள் ஐபோன் போலியாக இருக்கலாம்.
மென்பொருள்
அசல் iPhone 16 சமீபத்திய iOS பதிப்பைக் கொண்டுள்ளது. மேலும் அனைத்து செயலிகளும் முன்பே நிறுவப்பட்டிருக்கும். செட்டிங்ஸ் சென்று போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செயல்திறன்: அசல் iPhone 16 மிகவும் மென்மையானது மற்றும் வேகமானது. எந்த நிலையிலும் ஹேங் ஆகாது. கேமரா தரம் மிகவும் நன்றாக இருக்கும். சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தரத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க | புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
தொலைபேசி வடிவமைப்பு: ஒரிஜினல் iPhone 16 போனின் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியான மற்றும் பிரீமியம் தோற்றம் கொண்டது. இதில் சீரற்ற தன்மையோ கீறலோ இருக்காது. பொத்தானை அழுத்தும் போது திடமாகவும் மென்மையாகவும் உணர வேண்டும். ஒரு போலி ஐபோன் அசல் ஐபோனை விட இலகுவானதாக இருக்கலாம்.
ஐபோன் பேக் செய்யப்பட்டுள்ள பாக்ஸ்
அசல் iPhone 16 இன் பெட்டி மிகவும் பிரீமியம் தரத்தில் இருக்கும். இதில் அச்சுப் பிழையோ, கீறலோ இருக்காது. அதே நேரத்தில், போலி பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கும் என்பதோடு, அதில் எழுத்துப் பிழைகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
காட்சி தரம்
வழக்கமாக ஐபோனின் காட்சி மிகவும் பிரகாசமாகவும் மிகவும் கண்களுக்கு இதமானதாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் வாங்கிய ஐபோனில் காட்சி சிறப்பாக இருக்கவில்லை என்றால் ஐபோன் போலியானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். போலி ஐபோன் மாடல்களின் காட்சி நன்றாக இருக்காது.
மேலும் படிக்க | BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ