பிரபல வலைதளங்களங்கள போல் போலி வலைதளங்கள் உருவாகி வருவது தற்போது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI)-க்கும் போலி வலைதளத்தினை துவங்கிவிட்டனர் மர்ம நபர்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பட்டுள்ளதாவது. "இந்திய ரிசர்வ் வங்கியின் அதாகாரப் பூர்வ இணையதளத்தினைப் போல், போலி வலைதளத்தினை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த போலி வலைதளத்தினில் மக்கள் தங்கள் விவரங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது" என தெரிவித்துள்ளனர்.


இந்த போலி வலைதளத்தின் URL ஆனது www.indiareserveban.org என்ற இணைப்பில் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பானது,  www.rbi.org, www.rbi.in  என்ற URL-ல் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த போலி வலைதளங்களில் மக்கள் தங்களது சுயவிவரங்களை கொடுப்பதன் மூலம் ஆபத்தில் சிக்கலாம் எனவும், அவற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ளுமாறும் RBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!