JioCinema Ad Free New Plan Updates: தொலைத்தொடர்பு துறையில் சில ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது அத்துறையில் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக கடுமையாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜியோ 5ஜி சேவை கொண்டுவந்த நிலையில், ஏர்டெலும் 5ஜி வசதியை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா இன்னும் 4ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல், ஓடிடியிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ஜியோசினிமா (JioCinema) தற்போது இந்தியாவில் பல்வேறு வகையிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பாக, ஹாட்ஸ்டார் விளையாட்டு போட்டிகளை ஸ்ட்ரீம் செய்வதில் முன்னணியில் இருந்தது. தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் உள்பட இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஸ்ட்ரீம் செய்யும் உரிமத்தை ஜியோசினிமா பெற்றது. இதன்மூலம், மூலம் பல கோடி வாடிக்கையாளர்களை ஜியோசினிமா பெற்றிருக்கிறது. 


ஐபிஎல் ஓடிடி உரிமம்


குறிப்பாக, ஹாட்ஸ்டார் ஐபிஎல் தொடரை காண சந்தா வசூலித்து வந்த நிலையில், ஜியோசினிமா அந்த முறையை மாற்றி அடிப்படை வீடியோ குவாலிடியில் பார்க்க இலவச அணுகலை பார்வையாளர்களுக்கு வழங்கியது, இதுவும் பலரை ஈர்க்கக் கூடிய முக்கிய விஷயமாக அமைந்தது. தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தக்கவைத்திருந்தாலும், ஐபிஎல் தொடரை ஸ்ட்ரீம் செய்யும் ஓடிடி உரிமத்தை வரும் 2027ஆம் ஆண்டு வரை ஜியோசினிமா பெற்றிருக்கிறது. எனவே, ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண இலவச அணுகலை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறுவார்கள் என கூறப்பட்டது. 


மேலும் படிக்க | ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்


நாளை அறிமுகம்!


இந்நிலையில், ஜியோசினிமா விளம்பரம் இல்லா சந்தா திட்டத்தை தற்போது கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி (நாளை) இந்த புதிய விளம்பரம் இல்லா சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஜியோசினிமா அறிவித்திருந்தது. இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளை காணவும் புதிய சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.


கடந்த ஏப். 21ஆம் தேதி ஜியோசினிமா அதன் X பக்கத்தில்,"மாற்றம் என்பது நிலையானது. ஆனால் உங்கள் ரீசார்ஜ் பிளான் அப்படியிருக்க வேண்டியதில்லை. ஒரு புதிய திட்டம், ஏப். 25ஆம் தேதி முதல்..." என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை அத்திட்டம் குறித்து வேறு தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை. எனவே, நாளை அத்திட்டம் முறைப்படி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜியோசினிமா ப்ரீமியம் திட்டம்


ஜியோசினிமாவில் இதுவரை ஒரே ஒரு ப்ரீமியம் திட்டம் மட்டுமே உள்ளது. அது வருடத்திற்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.99 திட்டமாகும். இருப்பினும் இதன்மூலம் பல நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் அணுகலை பெறலாம் என்றாலும் நீங்கள் நீண்டநேரம் பார்க்கும்போது விளம்பரங்களை இடைமறிக்கும் என்பதையும் குறிப்பிட வேண்டும். தற்போது உள்ள இந்த பிளான் HBO மற்றும் Peacock ஆகியவற்றின் ப்ரீமியம் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிக்களுக்கான அணுகலை மட்டுமே வழங்கும். 


டாப் வீடியோ குவாலிட்டியில் நான்கு சாதனங்கள் வரை இதை நீங்கள் ஸ்ட்ரீம் செய்துகொள்ளலாம். இந்நிலையில் புதிய திட்டத்தின் மூலம் விளம்பரம் இல்லா சேவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. இதன்மூலம் நீங்கள் ஐபிஎல் தொடரை விளம்பரம் இல்லாமல் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டியதாகியிருக்கும். அதேபோல், ஐபிஎல் தொடரை காண தற்போது உள்ள இலவச அணுகல் என்பது தொடரும் என்றே கூறப்படுகிறது, அதற்கு எந்த பாதிப்பும் இருக்காது.


மேலும் படிக்க | ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ