Samsung Galaxy S24 Ultra 5G: ஸ்மார்ட்போன் பிரியரா நீங்கள்? பிரபலமான, பிராண்டட், நல்ல செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன சலுகை விலைவில் வாங்க வேண்டுமா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy S24 Ultra 5G ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனாகும். இது சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் அனைவராலும் இதை வாங்க முடிவதில்லை. ஆனால், இந்த போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்தள்ளது. தற்போது, ​​இந்த போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் காரணமாக அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது. இனி வாடிக்கையாளர்கள் இந்த போனை மலிவாக வாங்கலாம். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.


Samsung Galaxy S24 Ultra 5G: பிளிப்கார்ட்டில் கிடைக்கும் தள்ளுபடி என்ன?


Samsung Galaxy S24 Ultra 5G (12GB RAM + 256GB சேமிப்பு) விலை முன்பு ரூ.1,34,999 ஆக இருந்தது. ஆனால், தற்போது இந்த போன் Flipkart இல் எந்த வங்கி தள்ளுபடியும் இல்லாமல் 9% தள்ளுபடியுடன் ரூ.1,21,999க்கு கிடைக்கிறது. தள்ளுபடிகள் இத்துடன் முடியவில்லை. இந்த ஃபோனில் நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மூலம், இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அதிகமாக குறைகின்றது.


மேலும் படிக்க | இலவச இன்டர்நெட் வேணுமா... டிச.31ஆம் தேதிக்குள் முந்துங்கள் - பிஎஸ்என்எல்-ன் அதிரடி தள்ளுபடி!


Samsung Galaxy S24 Ultra 5G -இல் கிடைக்கும் சலுகைகள்


Samsung Galaxy S24 Ultra 5G (12GB RAM + 256GB சேமிப்பு) Flipkart இல் ரூ.1,21,999 விலையில் கிடைக்கிறது. எனினும், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய Samsung Galaxy S23 Ultra -ஐ பரிமாற்றினால், அதாவது எக்ஸ்சேஞ் செய்தால், 40,400 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த வழியில் போனின் விலை ரூ.81,599 ஆக குறையும். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் தொகையின் அளவு எக்ஸ்சேஞ் செய்யப்படும் போனின் நிலையைப் பொறுத்தது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதனுடன், எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை வெறும் 69,599 ரூபாய்க்கு வாங்கலாம்.


Samsung Galaxy S24 Ultra 5G இன் விவரக்குறிப்புகள்


சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ராவின் வடிவமைப்பு கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவைப் போன்றது. இது ஒரு பிளாட் டிஸ்ப்ளே மற்றும் மேட்-பினிஷ் பக்க ரெயில்களைக் கொண்டுள்ளது. இது டைட்டானியம் பாடியைக் கொண்டுள்ளது. இது கேலக்ஸி தொடரில் முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் பிளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது மிகவும் பிரகாசமானது மற்றும் கொரில்லா கிளாஸ் ஆர்மரால் பாதுகாக்கப்படுகிறது.


இந்த சாம்சங்க் ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 3 மொபைல் இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த பொன், 50MP டெலிஃபோட்டோ கேமரா, 200MP முதன்மை அகல கேமரா, 10MP 3x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொலைபேசியில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


மேலும் படிக்க | ஜியோவின் புத்தாண்டு பரிசு.. ரூ.2025 ரீசார்ஜில்... ரூ.2150-க்கான கூடுதல் பலன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ