iPhone 16: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி. ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சமீபத்திய iPhone 16 இப்போது இந்தியாவில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போனை ரூ.20,000 -க்கும் குறைவாக வாங்க முடியும். இது ஆச்சரியத்தை அளிக்கலாம், ஆனால் இது உண்மைதாம். ஐபோன் 16 -ஐ குறைந்த விலையில் வாங்குவது எப்படி? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Sale
ஐபோன் 16 செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட் (Flipkart) ஒரு பெரிய டீலை கொண்டு வந்துள்ளது.
ஐபோன் 16 இன் 128 ஜிபி மாறுபாடு ரூ.79,990 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 256 ஜிபி மாடலின் விலை ரூ.89,990 மற்றும் 512 ஜிபி பதிப்பின் விலை ரூ.1,09,990 ஆகும். ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் ஐபோன் 16 இன் 128 ஜிபி மாறுபாட்டை ரூ.20,000 -க்கும் குறைவான விலையில் வாங்கலாம். ஆம், Flipkart ஐபோன் 16 கைபேசியில் ரூ.60,600 எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது.
Exchange Offer
பிளிப்கார்ட் அளிக்கும் இந்த பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையை வாடிகையாளர்கள் பயன்படுத்திக் கொண்டால், இந்த லேட்டஸ்ட் ஐபோனை வெறும் ரூ.19,390 -க்கு வாங்கலாம். எனினும், உங்கள் பழைய போனின் விலை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் எவ்வளவு கிடைக்கும் என்பது அதன் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Bank Offer: வங்கிச் சலுகையும் கிடைக்கும்
Flipkart இந்த போனில் 5 முதல் 12 சதவீதம் வரை வங்கி சலுகைகளையும் வழங்குகிறது. உங்களிடம் இந்த ஆஃபருக்கான வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால், வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்தி விலையை மேலும் குறைக்கலாம்.
ஐபோன் 16: விவரக்குறிப்பு
டிஸ்ப்ளே: iPhone 16 ஆனது 2556×1179 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 460 ppi பிக்சல் டென்சிடியுடன் 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் IP68 ரேடிங் உள்ளது. இது நீர் தெறிப்பு மற்றும் தூசிக்கு எதிரான பாதுகாப்பை பெற்றுள்ளது.
கேமரா: iPhone 16 சிறந்த கேமரா கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. காட்சி நுண்ணறிவு உதவியுடன் இதில் பயனர்கள் பல அம்சங்களை பயன்படுத்த முடியும். பொருட்களை அடையாளம் காண்பது, அதன் விவரங்களை அறிந்து கொள்வது போன்றவை இவற்றில் சில. இது 48MP ஃப்யூஷன் கேமராவைக் கொண்டுள்ளது. இதில் 2x டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிக்காக ƒ/1.9 துளை கொண்ட 12MP TrueDepth முன்பக்கக் கேமரா உள்ளது. அதன் மெஷின் லர்ணிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன், பலத்த காற்றிலும் வீடியோக்களை உருவாக்க முடியும். இதில் உள்ள அம்சத்தின் உதவியால், தேவயற்ற சத்தம் பதிவு செய்யப்படாது.
செயலி: ஐபோன் 16 A18 பயோனிக் சிப்பில் இயங்குகிறது. ஐபோன் 16 ஆப்பிள் நுண்ணறிவை சிறப்பாகப் பயன்படுத்துகிறது. இதற்காக இரண்டாம் தலைமுறை 3-நானோமீட்டர் தொழில்நுட்பம் இதில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | iPhone 16 வாங்க அட்டகாசமான வாய்ப்பு: ரூ.16,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ