Apple Iphone 15: ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசைகளுள் ஒன்றாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் மோகம் இளைய சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. பிரீமியம் வகை ஸ்மார்ட்போனில் ஆப்பிள்தான் சிறந்தது. தற்போது காதலர் தின சீசன் வேறு இருக்கும் நிலையில், ஐபோன் வாங்க இதுதான் சிறப்பான தருணமாகும். அடுத்த ஆப்பிள் 16 மொபைல் இந்தாண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 பிளிப்கார்டில் இதுவரை இல்லாத வகையில் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் அசல் விலை 79,900 ரூபாயாகும். 


தற்போது இந்த ஸ்மார்ட்போனை 55 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். ஐபோன் 15 இப்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் லேட்டஸ்ட் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனாகும் ஒன்றாகும். இந்த ஆப்பிள் 15 ஸ்மார்ட்போன் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னதாக, ஐபோன் 14 தொடரின் சார்பு மாடல்களுக்கு இது மட்டுப்படுத்தப்பட்டது. மேலும், தொலைபேசியில் சக்திவாய்ந்த கேமராக்களும் உள்ளன.


பிளிப்கார்டில் இந்த ஆப்பரை எப்படி பெறுவது?


128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 15 பிளிப்கார்டில் 66 ஆயிரத்து 999 ரூபாயில் விற்பனைக்கு உள்ளது. ஆனால் அதன் தள்ளுபடி விலை 12 ஆயிரத்து 901 ரூபாய் ஆகும். ஃப்ளிப்கார்ட்டில் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு இந்த மொபைல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 


மேலும் படிக்க | 401 கிமீ ரேஞ்சில் அறிமுகமான பக்கா ஸ்டைலிஸ்ஷான மின்சார கார் - விலை எவ்வளவு தெரியுமா?


தற்போது உங்களிடம் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு இருந்தால், கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 64 ஆயிரத்து 999 ரூபாயாகும். மேலும், நீங்கள் சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, டிபிஎஸ் அல்லது பேங்க் ஆஃப் பரோடா கார்டுகளைப் பயன்படுத்தினால், 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். 


கூடுதல் ஆப்பர்கள்...


அதாவது 1,500 ரூபாய்க்கும் அதிகமாக நீங்கள் சேமிக்கலாம், இதன் மூலம் இந்த மொபைல் 63 ஆயிரத்து 499 ரூபாய்க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் 3 ஆயிரத்து 300 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம்.


மேலும், உங்களிடம் பழைய தொலைபேசி இருந்து அதனை எக்ஸ்சேஜ் செய்யும்பட்சத்தில், ஐபோன் 15 மொபைலை 54 ஆயிரத்து 900 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். இருப்பினும், உங்கள் மொபைலின் விலை உங்கள் மொபைலின் நிலை மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டைப் பொறுத்தது எக்ஸ்சேஜ் விலை மாறும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | கூகுளின் இலவச AI ஆப் வந்தாச்சு..! பயன்படுத்துவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ