Simplified IMPS Transaction: பண பரிமாற்றம் என்பது இந்த UPI யுகத்தில் மிக சாதரணமாகிவிட்டது. குறைந்த அளவிலான பண பரிமாற்றம் முதல் சில்லறை தேவைகளுக்கு பண பரிமாற்றம் வரையில் என UPI மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான பணப்பரிமாற்றத்திற்கு ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட பல பண பரிமாற்ற முறைகள் கைக்கொடுக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஐஎம்பிஎஸ் (IMPS - உடனடி கட்டண சேவை) மூலம் பணத்தை பெறுபவரின் மொபைல் எண் மற்றும் வங்கி பெயரை மட்டும் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஐஎம்பிஎஸ் பணபரிமாற்றத்தின் போது, பயனாளிகளைச் சேர்க்க வேண்டிய தேவையையும், IFSC குறியீட்டின் தேவையையும் நீக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐஎம்பிஎஸ் என்றால் என்ன?


ஐஎம்பிஎஸ் என்பது வங்கி வாடிக்கையாளர்களிடம் பிரபலமான பணப் பரிமாற்ற முறையாகும். வாடிக்கையாளர்களுக்கு வசதியான பணப் பரிமாற்ற முறையும் கூட... இது 24 மணிநேரமும், அனைத்து தினத்திலும் உடனடியாக உள்நாட்டு நிதிகளை பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. 


இதனை மொபைல் பேங்கிங் ஆப்ஸ், வங்கி கிளைகள், ஏடிஎம்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஐவிஆர்எஸ் போன்ற பல்வேறு வசதிகள் மூலம் அணுகலாம். ஐஎம்பிஎஸ் முறை என்பது ஒரு நபரிடம் இருந்து கணக்கிற்கோ (P2A) அல்லது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கோ (P2P) பரிமாற்ற முறைகள் மூலம் பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.


மேலும் படிக்க | Budget 2024: நாளை பட்ஜெட் தாக்கல், இன்றே அரசின் பரிசு.. குறைகிறது மொபைல் போன்கள் விலை


NPCI சுற்றறிக்கையின்படி...


அந்த வகையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அனைத்து உறுப்பினர்களும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் (அதாவது, இன்று) ஐஎம்பிஎஸ் முறையை பெறும் அனைத்து வசதிகளிலும் மொபைல் எண் மற்றும் வங்கிப் பெயர் மூலம் நிதி பரிமாற்றங்களை தொடங்குவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் இணங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. 


மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வசதிகளிலும் பணம் பெறுபவர்/பயனாளியின் கலவையுடன் வெற்றிகரமான மொபைல் எண் மற்றும் வங்கி பெயரை சேர்க்க வங்கிகள் ஆப்ஷன்களை அளிக்கும்.


பல கணக்குகள் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், பயனாளி வங்கி முதன்மை/இயல்புநிலை (Primary/Default) கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பயன்படுத்தி முதன்மை/இயல்புநிலை கணக்கு கண்டறியப்படும். பரிவர்த்தனைகள் ஒப்புதல் இல்லாமல் நிராகரிக்கப்படும்.


ஐஎம்பிஎஸ் மூலம் பரிவர்த்தனையை செய்வது எப்படி?


ஒரு பயனாளியைச் சேர்க்காமல் இந்த எளிமைப்படுத்தப்பட்ட ஐஎம்பிஎஸ் மூலம் ஒருவர் ரூ.5 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம். ஐஎம்பிஎஸ் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது எப்படி என தெரிந்துகொள்ள விரும்பினால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும். 


ஐஎம்பிஎஸ் மூலம் பணத்தை மாற்ற, ஒருவர் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:


- மொபைல் பேங்கிங் செயலியை உங்கள் மொபைலில் திறக்கவும்


- முகப்பு பக்கத்தில், பண பரிமாற்ற ஆப்ஷனை சரிபார்க்கவும்


- பண பரிமாற்ற முறையாக ஐஎம்பிஎஸ்-ஐ தேர்வு செய்யவும்


மொபைல் எண், வங்கி பெயர், MMID (மொபைல் பண அடையாளங்காட்டி) மற்றும் MPIN (மொபைல் தனிப்பட்ட அடையாள எண்) போன்ற விவரங்களை உள்ளிடவும்


- பரிமாற்றத்திற்கான தொகையை உள்ளீடு செய்து அதனை உறுதிப்படுத்தவும்


- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளீடு செய்து பரிவர்த்தனைகளை முடிக்கவும்.


இதற்கிடையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) உடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்திருந்தது. இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கு வெளியே UPI பேமெண்ட்கள் கிடைப்பதை விரிவுபடுத்த இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது. 


மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. FASTagல் அதிரடி மாற்றம், உடனே படிக்கவும்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ