Amazon Great Summer Sale 2024: இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, இந்திய சந்தையில் ஒரு பொருள் களமிறங்குகிறது என்ரால் அது நடுத்தர வர்க்கத்தினரை கவரவே முயற்சிப்பார்கள். அந்த வகையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மார்க்கெட்டிங் நுட்பம்தான் தள்ளுபடி விற்பனை. பண்டிகை உள்ளிட்ட பல சீசன்களில் பல்வேறு பொருள்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை தளங்கள் கூட இதுபோன்ற தள்ளுபடி விற்பனையை வழங்கி வருகின்றன. தீபாவளி, ஹோலி, கிறிஸ்துமஸ் மட்டுமின்றி பண்டிகளைக்கு மட்டுமின்று இதுபோன்ற கோடைக் கால சீசன்களிலும் பல பொருள்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும். அந்த வகையில், அமேசான் நிறுவனம் அதன் கோடைக் கால தள்ளுபடி விற்பனை தேதியை அறிவித்துள்ளது. 


எவ்வளவு தள்ளுபடிகள்?


பலரும் எதிர்பார்த்து வந்த அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 தள்ளுபடிகள் மற்றும் ஆப்பர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் அதன் செயலியிலும், இணையதளத்திலும் இதுகுறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் பல தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 


மேலும் படிக்க | சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடி


லேப்டாப்புக்கு 40 சதவீதமும், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்போன் உபகரணங்களுக்கு 40 சதவீதமும்,  அலெக்ஸா மற்றும் ஃபையர் டிவி சாதனங்களுக்கு 45 சதவீதமும், பிரிட்ஜ் மற்றும் ஏசி 55 சதவீதமும், உயர் ரக டிவிகள் 65 சதவீதமும், சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களுக்கு 70 சதவீதமும், டேப்லெட்டுக்கு 70 சதவீதமும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 70 சதவீதமும், ஹெட்போன்களுக்கு 75 சதவீதமும், இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 75 சதவீதமும் தள்ளுபடி என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. 
அதுமட்டுமின்றி, இந்த சூழ்நிலையில் டிவிகளை வட்டியில்லா மாதத் தவணையில் நீங்கள் பெறலாம்.  ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஒன்கார்டு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட வங்கிகளுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடி உள்ளதாகவும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. 


அமேசான் கிரேட் சம்மர் சேல் தேதிகள் அறிவிப்பு


அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 வரும் மே 2ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து தொடங்கும். பிரைம் பயனர்கள் முன்கூட்டியே, அதாவது நள்ளிரவு 12 மணிக்கு இந்த தள்ளுபடிக்கான அணுகலை பெறுவார்கள். இன்னும் இந்த தள்ளபடி விற்பனைக்கு நான்கு நாள்களே உள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்கள் எவையெவை தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதை இப்போதே பார்த்து வைத்துக்கொள்ளலாம்.


குறிப்பாக, இந்த கோடை சீசனில் நீங்கள் வாங்க நினைக்கும் பிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர் ஆகியவை கூட நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கும். 70 சதவீதம் வரை இந்த பொருள்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. அந்த வகையில், அமேசானில் தள்ளபடி விலையில் கிடைக்கும் 1 டன் ஏசிகள் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால், இதனை கிளிக் செய்யவும். எல்ஜி, வோல்டாஸ், கோத்ரேஜ் ஆகிய நிறுவனங்களின் 1 டன் ஏசிகள் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.  


மேலும் படிக்க | 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஃபோன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ