மொபைல் யூசர்களுக்கு இடியாக இறங்கிய செய்தி..! இனி இந்த இலவச சேவை நிறுத்தம்
Vodafone Idea updates : வோடஃபோன் ஐடியா மொபைல் யூசர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த Vi Movies & TV இன் இலவச சந்தாவை அதன் அனைத்து திட்டங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. ஒரே லாகின் மூலம் பல OTT செயலிகளுக்கான சப்ஸ்கிரிப்சனை பெற்று வந்தனர். இனி ஒவ்வொரு மாதமும் ரூ.202 செலவிட வேண்டும்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் அனைத்து திட்டங்களிலிருந்தும் Vi Movies & TV இன் இலவச சந்தாவை நீக்கியுள்ளது. இதில், பயனர்கள் ஒரே லாகின் மூலம் பல OTT செயலிகளுக்கான இலவச சப்ஸ்கிரிப்சனை பெற்றனர். வோடபோன்-ஐடியா திட்டங்களுடன் வரும் இந்த இலவச நன்மை பயனர்களால் மிகவும் விரும்பப்பட்டது. Telecom Talk இன் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, வோடோஃபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியில் உள்ள எந்த திட்டத்திலும் இந்த நன்மை இனி காணப்படாது. கட்டணச் சந்தாவை பெறும் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வோடாஃபோன் ஐடியா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
இனி Vi MTV Pro சந்தாவுக்கு கட்டணம்
Vodafone-Idea இப்போது Vi MTV Pro திட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இதற்காக, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 202 ரூபாய் செலவிட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அதன் ஒரு வருட சந்தா கட்டணம் 2400 ரூபாய்க்கு மேல் ஆகிறது. ஆண்டு சந்தா எடுக்கும் பயனர்களுக்கு நிறுவனம் எந்தவிதமான தள்ளுபடியையும் வழங்குவதில்லை. இந்த திட்டத்தில் வழங்கப்படும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், Disney + Hotstar, Sony Liv, Fancode, Hungama மற்றும் Chaupal உட்பட மொத்தம் 14 OTT ஆப்ஸிற்கான இலவச சப்ஸ்கிரிப்சனை வாடிக்கையாளர்களாகிய நீங்கள் பெறுவீர்கள்.
ரூ.904 திட்டம் தொடக்கம்
Vodafone-Idea பயனர்களுக்கு ரூ.904 என்ற புதிய அன்லிமிடெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணையத்தைப் பயன்படுத்த தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டத்தில், நீங்கள் அன்லிமிடெட் அழைப்புகளையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு நிறுவனம் பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்கும் Binge All Night இதில் அடங்கும். இந்தத் திட்டத்தில் டேட்டா டிலைட்ஸ் நன்மையையும் பெறுவீர்கள். இதில், நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் பிரைம் வீடியோ லைட்டின் இலவச சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள்.
மேலும் படிக்க | சரியாக நெட் கிடைக்கவில்லையா...? உடனே இந்த விஷயங்களை செய்யுங்கள் - பிரச்னை தீரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ