நீங்கள் ஐபோன் 13 அல்லது ஐபோன் 12 ஐ வாங்க திட்டமிட்டால், விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். இந்த ஆன்லைன் ஸ்டோர்கள் ஐபோன் 13 இல் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. முழு விவரத்தை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் சேல்ஸ் தள்ளுபடிகள்
விஜய் சேல்ஸ் ரூ.6000 உடனடி தள்ளுபடியை தொடங்கியுள்ளது. அதாவது இந்த சாதனம் ரூ.73,900 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 256 ஜிபி ரூ.84,900க்கு கிடைக்கிறது. தள்ளுபடி விலையை கேஷ்பேக் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளில் கிடைக்கும் தள்ளுபடியுடன் இணைக்கலாம். அத்துடன் நீங்கள் 5% கூடுதல் தள்ளுபடி பெறலாம், அதாவது ரூ.1500 வரை தள்ளுபடி ஆகும். கூடுதலாக, உங்கள் பழைய தொலைபேசியை எக்ஸ்சேன்ஜ் செய்து இன்னும் மலிவான ஐபோன் 13 ஐ வாங்கலாம். 


மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ் 


ரிலையன்ஸ் டிஜிட்டலில் தள்ளுபடிகள்
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஐபோன் 13 இல் ரூ. 5910 தள்ளுபடி தருகிறது, அதாவது 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.73,990 ஆகும். ஆனால் இந்த தொலைபேசியை இன்னும் மலிவாக வாங்க 7.5% உடனடி தள்ளுபடியுடன், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ. 5000 பேங்க் கேஷ்பேக் ஐ பயன்படுத்தலாம்.


ஐபோன் 12க்கும் பெரும் தள்ளுபடி
இதேபோல், ஐபோன் 12 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் ரூ.9910 தள்ளுபடியை ஸ்டோர் வழங்குகிறது. இது தவிர, எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளில் ரூ.4000 கேஷ்பேக் பெறலாம்.


ஐபோன் 13 இன் அம்சங்கள்
இந்த டீலில் ஐபோன் 13-இன் 128ஜிபி மாறுபாடு பற்றி பேசப்பட்டுள்ளது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கேமரா அமைப்புடன் வருகிறது. 


இதில் 12எம்பி அல்ட்ரா-வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள், நைட் மோட் மற்றும் ஸ்மார்ட் எச்டிஆர் 4 போன்ற பல புகைப்பட முறைகளையும் வாடிக்கையாளர்கள் காணலாம். இந்த போனின் முன்பக்க கேமராவும் 12எம்பி கொண்டது.


மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR