பிரபல மொபைல் நிறுவனமான BlackBerry தனது அடுத்த படைப்பான KEY2 LE-னை பெர்லினில் வெளியிட திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனக்கென ஒரு தனி வழி வைத்துக்கொண்டு, மொபைல் சந்தையில் தனியொரு சாம்ராஜ்யத்தினை நடத்தி வரும் BlackBerry தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வரவினை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புது படைப்பிற்கு BlackBerry KEY2 LE என பெயரிடப்பட்டுள்ளது.



இந்த KEY2 LE-ன் அறிமுகம் குறித்து BlackBerry நிறுனவம் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த தகவல்களின் படி KEY2 LE அனது KEY1, KEY2 வடிவமைப்பினை போன்றே இருப்பதாக தெரிகிறது.


KEY2 மொபைலில் இருப்பது போன்று 4 வரிசை QWERTY  விசைப்பலகை கொண்டுள்ளது. மேலும் 4.5" முழு HD திறையினையும் கொண்டுள்ளது. கொர்னிங் கொரிலா கண்ணாடியுடன் வரும இந்த மொபைல் ஆனது 433ppi திரையடர்த்தி மற்றும் 1620 x 1080 திரை தீர்மானத்தினை கொண்டுள்ளது.


BlackBerry KEY2 LE பற்றி சிலகுறிப்புகள்...


  • 4.5" முழு HD திரை

  • Qualcomm Snapdragon 636 SoC செயல்திறன்

  • 13MP முன்கேமிரா, 5MP பின்கேமிரா

  • 4GB RAM, 32/64 GB சேமிப்பு திறன்

  • 3000mAh பேட்டரி

  • Android 8.1 Oreo மென்பொருள்

  • 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 LE, GPS