மிக குறைவான விலையில் Boat ஸ்மார்ட்வாட்ச்!
போட் ப்ளேஸ் ஆனது அப்பல்லோ 3 ப்ளூ ப்ளஸ் செயலியுடன் கிடைக்கிறது, இது பேட்டரி மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
போட் ப்ளேஸ் ஆனது அப்பல்லோ 3 ப்ளூ ப்ளஸ் செயலியுடன் கிடைக்கிறது, இது பேட்டரி மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
போட் நிறுவனம் தற்போது ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளேஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிய டிஸ்ப்ளே மற்றும் அதிகமான ஹெல்த் கேர் சம்மந்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. இந்த போட் ப்ளேஸ் ஆனது அப்பல்லோ 3 ப்ளூ ப்ளஸ் செயலியுடன் கிடைக்கிறது, இது பேட்டரி மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சின் செயல்திறனை மேம்படுத்துகிறது. பொதுவாகவே போட் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆடியோ பிராண்டுகளில் ஒன்றாகும், மிகவும் குறைந்த விலையில் சிறப்பான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாக அறியப்படுகிறது.
மேலும் படிக்க | Tecno Spark 8C அறிமுகம்: ரூ.8,000-ஐ விட குறைந்த விலை, அசத்தும் அம்சங்கள்
போட் ப்ளேஸ் ஆனது வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைப்பதால், இது வழக்கத்தை விட வேகமான சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது விரைவான பதில்கள், க்யூரேட்டட் மியூசிக் மற்றும் கேமரா கட்டுப்பாடுகள், டிஎன்டி மோட் & வானிலை அறிவிப்புகள் போன்ற சிறப்பான அம்சங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ரூ. 3499க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது பிப்ரவரி 25 முதல் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த வகை ஸ்மார்ட்வாட்ச்கள் ஆக்டிவ் பிளாக், ப்ளூ, ரேஜிங் ரெட் மற்றும் செர்ரி ப்ளாசம் ஸ்ட்ராப் ஆகிய வகைகளில் கிடைக்கும். 1.75-இன்ச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே மற்றும் 500 nits அதிக பிரகாசத்தைக் கொண்டுள்ளது. பிளேஸ் ஸ்மார்ட்வாட்ச் மிகவும் லேசான மற்றும் நீடித்த பிரீமியம் உலோகத்தால் செய்யப்பட்டு 10 மிமீ அளவை கொண்டுள்ளது. இவை குறைந்த மின் சக்தியில் அதிக செயல்திறனை வழங்குகிறது. மேலும் இதில் இதய துடிப்பு மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் போன்ற ஆரோக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR