அவசர காலத்தில் உயிரைக் காக்க உதவும் ஸ்மார்ட்போன் - இதை செய்யுங்கள்!

ஸ்மார்ட்போன் செட்டிங்ஸில் செய்யும் ஒருசில மாற்றங்கள் அவசர காலத்தில் உங்களின் உயிரைக் காப்பாற்ற உதவும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:01 AM IST
  • ஆபத்து காலத்தில் உதவும் ஸ்மார்ட்போன்
  • செட்டிங்ஸில் செய்ய வேண்டிய மாற்றம்
  • உங்கள் உயிரையும் காப்பாற்ற உதவும்
அவசர காலத்தில் உயிரைக் காக்க உதவும் ஸ்மார்ட்போன் - இதை செய்யுங்கள்! title=

நாம் எங்கு சென்றாலும், நம்முடன் ஒரு பொருள் என்றால் அது ஸ்மார்ட்போன் தான். இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், அந்த ஸ்மார்ட்போன் நம்முடைய அவசர காலத்தில் உயரைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம். செட்டிங்ஸில் செய்யும் சிறிய மாற்றம், ஆபத்து காலத்தில் இருக்கும் நம் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதால், அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | ரூ.4,360 EMI விலையில் மின்சார ஸ்கூட்டர்

அதாவது, போனில் இருக்கும் தொடர்புகளுக்கு (Contacts) செல்லாமலேயே லாக்ஸ்கீரின் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ளலாம். அவசர காலத்தில் லாக்ஸ்கிரீனை நீக்குவதற்கு கூட டைம் இருக்காது. அந்த சமயத்தில் லாக்ஸ்கீரின் வழியாகவே நீங்கள் எமர்ஜென்சி கால் செய்யலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவசரகால தொடர்புகளைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் போனில் My Info அல்லது 'My Contacts சென்று எமர்ஜென்சி தொடர்புகள் (Emergency Contacts) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை சேர்த்து வைக்க வேண்டும். அந்த தொடர்புகளுக்கு நீங்கள் லாக் ஸ்கீரினில் இருந்தவாறே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஐபோன் வாடிக்கையாளர்களும் இதேபோல் எமர்ஜென்சி தொடர்புகளை சேமித்து வைக்கும் செட்டிங்ஸ் உள்ளது. அதில் தொடர்புகளை சேமித்து வைத்து, அவசர கால உதவிக்கு அழைக்க முடியும். சாதாரணமாக பார்க்கும்போது இந்த தகவல் எளிமையாக தெரியலாம். அவசர காலத்தில் இருப்பவர்களுக்கே அதன் அருமை தெரியும்.

மேலும் படிக்க | UPI vs NEFT: பணப்பரிவர்த்தனைக்கு எது சிறந்தது? அறிந்து கொள்வோம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News