IRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பு!!
IRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்!!
IRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்!!
IRCTC இணையதளம் மூலம் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு மோசமான செய்தியை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் (IRCTC) தெரிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சேவை கட்டணம் வசூலிப்பதில் தனது விருப்பப்படி பயன்படுத்துமாறு நிதி அமைச்சகம் ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.
இதனால், ரயில் பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே துறைக்கு, மத்திய நிதியமைச்சகம் எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிப்பது பற்றி உத்தேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான சேவைக் கட்டணங்களை திரும்பப் பெற்று, டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்ததால், ஐஆர்சிடிசி.க்கு, இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஈடுகட்ட, ஆன்லைன் மூலம், படுக்கை வசதி கொண்ட ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 20 ரூபாயும், ஏசி வகுப்புகளில் பயணிக்க, டிக்கெட் முன்பதிவுக்கு 40 ரூபாயும் என, மீண்டும் சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மீண்டும் சேவைக் கட்டணம் அமலானால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரயில் பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.