Smartphone Tricks: இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா கனெக்ஷன் இல்லாமல் ஒரு நாளை கடப்பது மிகவும் சிரமம். இப்படியான சூழ்நிலையில், தொலைபேசியின் நெட் மெதுவாக அல்லது விட்டுவிட்டு இயங்கினால், அது பயன்படுத்துபவர்களை மிகவும் எரிச்சலடையச் செய்யும். ஒரு சில நேரங்களில் உங்களுக்கும் இப்படியான சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க நீங்கள் ஸ்மார்ட் டிரிக்ஸ் ஒன்றை பயன்படுத்தினால் போதும். டேட்டா வேகம் அதிகரிக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்


உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், வேகத்தை அதிகரிக்க உங்களுக்காக எளிதான டிப்ஸை இங்கே தெரிந்து கொள்வோம். மொபைலின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உங்கள் மொபைலின் ஏர்பிளேன் மோடை ஆன் செய்யலாம். சில நிமிடங்களுக்குப் பிறகு, நீங்கள் அந்த ஆப்சனை ஆப் செய்தால் இணைய வேகத்தில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.


மேலும் படிக்க | சேமிப்பு கணக்கை NRE கணக்காக மாற்ற முடியுமா? NRI, NRE, NRO-வித்தியாசம் என்ன? 


செட்டிங்ஸில் சில மாற்றம் 


இணைய வேகத்தை அதிகரிக்க மற்றொரு வழி உள்ளது. உங்கள் மொபைலின் மொபைல் டேட்டா உங்கள் சிம்மைச் சார்ந்த சில நெட்வொர்க் ஆப்சன்களை வழங்குகிறது. 4ஜி நெட்வொர்க் இருந்தாலும் அதில் சிக்னல் சரியில்லை என்பது பல நேரங்களில் நடக்கும். இந்த சமயத்தில், தொலைபேசியின் செட்டிங்ஸூக்குச் சென்று, 'மொபைல் டேட்டா' விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் '2G/3G/4G ஆட்டோ' விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் டேட்டா ஸ்பீடு சூப்பராக வரும் நெட்வொர்க்கை தானாகவே பெறுவீர்கள்.


அடுத்த டிரிக்ஸ் 


சிம் கார்டு மூலம் டேட்டா ஸ்பீடை நீங்கள் அதிகரிக்கலாம். சிம் கார்டில் தூசி படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதால், அதனை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். இதன் வழியாகவும் டேட்டா ஸ்பீடு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. 


மேலும் படிக்க | UPI விதிகளில் மாற்றம்? ஒருநாளில் எவ்வளவு தொகை டிரான்ஸாக்ஷன் செய்யலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ