பெரும்பாலான மக்கள் பணத்தை கொடுத்து பொருள் வாங்குவதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்துகொள்வது எளிமையாக இருப்பதாக கருதுகின்றனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட டேட்டாவின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ என பிரபலமாக அறியப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் வாயிலாக ரூ. 657 கோடி டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் யூபிஐ மூலம் டிரான்ஸாக்ஷன் செய்யும் அளவானது வால்யூம் அடிப்படையில் 4.6 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 1 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ரிசர்வ் வங்கியின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் உருவாக்கப்பட்ட உடனடி கட்டண முறை ஆகும்.
மேலும் படிக்க | Jackpot! இந்த அரிய ‘ரூபாய் நோட்டுகள்’ இருந்தால் ₹2 லட்சம் அள்ளலாம்!
இந்த யூபிஐ கட்டண சேவை மூலமாக வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு நபரும் இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையே எந்த நேரத்திலும், எங்கிருந்தும் பணத்தை உடனடியாக டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ள முடியும். இதில் பயனர்கள் விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸை வைத்து பணத்தை அனுப்ப வேண்டும், ஒரே ஸ்மார்ட்போனில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐஎப்எஸ்சி குறியீடு அல்லது கணக்கு எண்ணை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைத்து வைத்துக்கொண்டு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம். இதன் மூல செய்யப்படும் டிரான்ஸாக்ஷன் உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் பிஹெச்ஐஎம் யூபிஐ ஆப்ஸ் மற்றும் வங்கிகளின் மொபைல் ஆப்ஸ் தவிர போன் பே, பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பல்வேறு கட்டண ஆப்ஸைப் பயன்படுத்தலாம். மேலும் இதன்மூலம் செய்யப்படும் தினசரி டிரான்ஸாக்ஷன்களின் வரம்பை ரூ.2 லட்சமாக ஆர்பிஐ மற்றும் என்பிசிஐ நிர்ணயம் செய்துள்ளது. இப்போது ஒவ்வொரு வங்கிகளின் யூபிஐ டிரான்ஸாக்ஷனுக்கான வரம்பு எவ்வளவு என்பது பற்றி பார்ப்போம்.
1) எஸ்பிஐ : ஒரே தவணை - ரூ.1லட்சம் ; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
2) ஐசிஐசிஐ : ஒரே தவணை - ரூ.10,000( கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு ரூ.25,000); தினசரி வரம்பு - ரூ.10,000 ( கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு ரூ.25,000).
3) ஆந்திரா வங்கி : ஒரே தவணை - ரூ.1லட்சம் ; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
4) ஆக்சிஸ் வங்கி : ஒரே தவணை - ரூ.1லட்சம் ; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
5) கனரா வங்கி : ஒரே தவணை - ரூ.10,000 ; தினசரி வரம்பு - ரூ.25,000.
6) டேனா வங்கி : ஒரே தவணை - ரூ.1லட்சம் ; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
7) சிட்டி வங்கி : ஒரே தவணை - ரூ.1லட்சம் ; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
8) சிட்டி யூனியன் வங்கி : ஒரே தவணை - ரூ.1லட்சம் ; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
9) பரோட்டா வங்கி : ஒரே தவணை - ரூ.25,000; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
10) பேங்க் ஆஃப் இந்தியா : ஒரே தவணை - ரூ.10,000; தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
11) சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா : ஒரே தவணை - ரூ.25,000; தினசரி வரம்பு - ரூ.50,000.
12) மகாராஷ்டிரா வங்கி : ஒரே தவணை - ரூ.1 லட்சம் தினசரி வரம்பு - ரூ.1 லட்சம்.
மேலும் படிக்க | பயணிகள் ரயிலில் தூங்குவதற்கான ரயில்வேயின் புதிய விதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ