Kia alias Carens: இந்தியாவில் அறிமுகமாகும் Kia MPV காரின் பெயர் `கேரன்ஸ்`
இந்தியாவில் கியா எம்பிவி கார்கள், `கேரன்ஸ்` என்று அழைக்கப்படும், இந்த கார்கள், 3வரிசை இருக்கைகளுடன் வருகின்றன
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கியா எம்பிவி கார்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வெளியாகும். கியா இந்தியாவைப் பொறுத்தவரை, 'கேரன்ஸ்' என்ற பெயர் 'கார் + மறுமலர்ச்சி' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இது கார்களின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நவீன இந்திய குடும்பங்களுக்கான புதிய பிரிவை அறிமுகப்படுத்துவதையும் குறிக்கிறது.
Kia India நிறுவனம், தனது வரவிருக்கும் MPVயின் பெயரை வெளியிட்டது. தென் கொரிய நிறுவனமான கியா, இந்தக் காரை, பொழுதுபோக்கு வாகனம் (Recreational Vehicle (RV)) என்று அழைக்கிறது. கேரன்ஸ் (Carens) என்ற பெயர், 'கார் + மறுமலர்ச்சி' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த பெயர் கார்களின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது என்றும், கேரன்ஸ் அறிமுகத்துடன், கியா 'நவீன இந்திய குடும்பங்களுக்கான புதிய பிரிவை உருவாக்குவதன் மூலம் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும்' என்றும் கியா நிறுவனம் கூறுகிறது.
கேரன்ஸ் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை 'புதுமையான மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவங்களை' மூலம் பூர்த்தி செய்யும் என்று, கியா வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குடும்பப் பயணத்தை மறுவரையறை செய்யும். அடிப்படையில், கியா கார்னிவல் பிரீமியம் MPV பிரிவில் செய்ததைப் போலவே, இந்தியாவில் ஒரு புதிய பிரிவை வழங்குவதற்கான தொழில்நுட்பத்துடன் களமிறங்குகிறது.
Also Read | இந்த SUV மீது 2.5 லட்சம் அதிரடி தள்ளுபடி, இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
கேரன்ஸ் ஒரு SUVயின் (Luxury cars) தைரியத்துடன் கூடிய பெரிய குடும்பங்களுக்கான வாகனத்தையு புதுமையான மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வழங்குகிறது. கியா கேரன்ஸ் என்பது ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்திற்காகத் தயாரிக்கப்பட்டது’ என்று நிறுவனம் கூறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள கியாவின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் கியா கேரன்ஸ், டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டு, 2022 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டே-ஜின் பார்க் (Tae-Jin Park) கூறுகையில், “எங்கள் நான்காவது தயாரிப்பான கியா கேரன்ஸை இந்திய சந்தையில் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கை முறை மற்றும் சாலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மூன்று வரிசை இருக்கை அமைப்பு மற்றும் அம்சங்களைக் கொண்ட பிரீமியம் கார் இது.
மேலும், இது, குடும்பத்தினர் ஒன்றாக பயணிக்க வசதியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். கியா கேரன்ஸ், ஒரு கேம் சேஞ்சர் என்பதை நிரூபிக்கும்” என்று தெரிவித்தார்.
READ ALSO | 30 கிமீ மைலேஜுடன் 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவான CNG கார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR