பிஎஸ்என்எல் 4ஜி அறிமுக தேதி: இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் 65-க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்கள் 5ஜி சேவையை வழங்கியுள்ளன. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் 4ஜி சேவை ஏற்கனவே இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இன்னும் 3ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. தற்போது பிஎஸ்என்எல்  4ஜி சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் நிறுவனம் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். ஆனால் 4G வெளியீடு 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் தாமதத்திற்கான காரணத்தை நிறுவனம் தெரிவிக்கவில்லை.


பிஎஸ்என்எல் 5ஜி சேவை எப்போது தொடங்கும்?


மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிஎஸ்என்எல்லின் 5ஜி 2024ல் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே உறுதி செய்துள்ளார். ஆனால் 4ஜி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. பிஎஸ்என்எல் லோக்கல் 4ஜி உபகரணங்களைப் பயன்படுத்தும். இதற்கு நிறுவனம் தேஜஸ் நெட்வொர்க்கின் உதவியைப் பெறுகிறது. இதன் கணினி ஒருங்கிணைப்பாளராக டிசிஎஸ் செயல்படும். அதே நேரத்தில், சி-டாட் பிஎஸ்என்எல்-க்கு உள்நாட்டு 4ஜி-ஐ தொடங்க உதவும்.


மேலும் படிக்க | பிஎஸ்என்எல் ரூ. 666 ரீசார்ஜ் பிளான்: 105 நாள் வேலிடிட்டி, தினமும் 2ஜிபி தரவு தரும் சூப்பர் திட்டம் 


தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது பிஎஸ்என்எல்-க்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். தற்போது வாடிக்கையாளர்களை அதிகரிக்க நிறுவனத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பல டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர். பிஎஸ்என்எல் இப்போது 4ஜியை அறிமுகம் செய்திருந்தால், அதிக பலன் கிடைத்திருக்கும். ஆனால் 4ஜி சேவையின் தொடக்கம் தாமதமாகியுள்ளது. "4ஜி சேவை 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்படும்." என டெல்கோ ட்வீட் செய்தது,


பிஎஸ்என்எல் 5ஜி சேவை பற்றி அமைச்சர் கூறுவது என்ன? 


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னவ் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் ஒடிசாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தனர். அப்பொழுது தொலைத்தொடர்பு அமைச்சர் கூறுகையில், ‘தற்போது நிறுவனம் 4ஜியில் கவனம் செலுத்தி வருகிறது. 5ஜி கொண்டு வர இன்னும் 1 வருடம் ஆகும். பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவை ஏப்ரல் 2024ல் அறிமுகப்படுத்தப்படும்.’ என்றார். 


மேலும் படிக்க | வெறும் 107 ரூபாய்க்கு ரீசார்ஜ்...40 நாட்கள் வேலிடிட்டி..அசத்தும் பிஎஸ்என்எல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ