அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான (BSNL) தனது புதிய பிராட்பேண்ட் (Broadband) மற்றும் லேண்ட்லைன் (Landline) வாடிக்கையாளர்களுக்கு 4G செயல்படுத்தப்பட்ட SIM கார்டுகளை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது. இலவச 4G SIM திட்டம் கடந்த வாரம் கேரளா மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டாரங்களில் தொடங்கியது, இந்த சலுகை 2021 மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகையின் மூலம், புதிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் (Broadband Planஅல்லது பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு BSNL இலவச 4G சிம் கார்டு (4G Sim card offer) வழங்கப்படும். இந்த திட்டத்தின் சிறப்பு என்ன என்பதை அறிவோம். சிறப்பு என்னவென்றால், சிம் கார்டுடன் 75 ரூபாய் திட்ட வவுச்சரும் வழங்கப்படும். அனைத்து பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர், பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் திட்டங்களும் இந்த சலுகையின் ஒரு பகுதியாகும்.


இந்த ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பு குறித்து பேசுகையில், BSNL வாடிக்கையாளர்களுக்கு இந்த PV 75 இல் 100 நிமிட இலவச குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. இது தவிர, 2 ஜிபி டேட்டாவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 60 நாட்கள் ஆகும்.


ALSO READ | BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!


நிறுவனம் தனது Bharat Fiber plans ரூ .449 இல் தொடங்கி, பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது Bharat Fiber plans மாற்றங்களைச் செய்வதன் மூலம் FUP வரம்பையும் வேகத்தையும் அதிகரித்துள்ளது. இப்போது நிறுவனம் பல பிராட்பேண்ட் திட்டங்களுடன் 300 Mbps வரை வேகத்தை வழங்குகிறது.


இப்போது பயனர்கள் ரூ. 1999 அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து திட்டங்களிலும் 300 Mbps வேகத்தைப் பெறலாம். அதே நேரத்தில், ரூ .1,999 க்கு, வாடிக்கையாளர்கள் இப்போது 300 Mbps வரை வேகத்துடன் 4500 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.


ALSO READ | அனைத்து வசதிகளுடன் BSNL இன் ரூ .109 ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR