பிஎஸ்என்எல் கொடுத்த கோடை பரிசு! 2 பிளான்களின் வேலிடிட்டி அதிகரிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 20 நாட்களுக்கு கூட்டியுள்ளது. பிஎஸ்என்எல் ரூ.699 மற்றும் ரூ.999 திட்டங்களில் இந்த வேலிடிட்டி நீட்டிப்பு கிடைக்கும்.
சில நாட்களுக்கு முன்பு, BSNL அதன் ரூ.99 திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை (BSNL Validity) திடீரென குறைத்தது. இப்போது அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. BSNL இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நீண்ட காலமாக நிறுவனத்தின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருக்கும் திட்டங்கள் தான்.
மேலும் படிக்க | ஜியோ பயனர்களை கவரும் ரூ.299 திட்டம்.. அனைத்துமே இலவசம், ஜாக்பாட் ரீசார்ஜ் பிளான்
BSNL இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஏனெனில் பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்கான திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை குறைப்பதில் மும்முரமாக இருக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் அதன் ரூ.699 மற்றும் ரூ.999 என்ற இரு ப்ரீப்பெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.
முன்னதாக ரூ.699 திட்டம் 130 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வந்தது. ஆனால் தற்போது அது 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னொருபுறம், ரூ.999 திட்டம் முன்பு 200 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்தது. இது இப்போது 215 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் வேலிடிட்டி அதிகரித்திருக்கும் தகவல் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பார்க்கலாம்.
ரூ. 699 திட்டத்தில், பயனர்கள் இப்போது தினசரி 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ்களை முழு 150 நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், முதல் 60 நாட்களுக்கு இலவச PRBTயும் கிடைக்கும். அதே நேரத்தில், ரூ.999 திட்டத்தில், பயனர்கள் இப்போது அன்லிமிடெட் குரல் அழைப்பை 215 நாட்களுக்கும், PRBT 2 மாதங்களுக்கும் பெறுகிறார்கள். பிஎஸ்என்எல்லின் ரூ.999 திட்டத்தில் டேட்டா, எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை.
மேலும் படிக்க | இலவச நெட்ஃபிளிக்ஸ் சலுகை: ஜியோ, ஏர்டெல் இரண்டில் எது பெஸ்ட்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ