சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது, அவற்றின் செல்லுபடியாகும் காலம் மிக நீண்டது. 300 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் 3 திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நிறைய அழைப்பு நிமிடங்கள் மற்றும் டேட்டாவைப் கொடுக்கும் இந்தத் திட்டங்கள், பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

365 நாட்களுக்கு 'எல்லாம் இலவசம்' என்ற ஓராண்டு விடுப்பு திட்டத்தை பிஎஸ்என்எல் கொண்டு வந்ததை அடுத்து, ஜியோ பயனர்கள் கவலைப்படுவார்கள். ஏனென்றால், இப்போது மற்ற மொபைல் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ளன, இதனை அடுத்து பலர் மலிவான திட்டங்களைத் தேடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் BSNL நல்ல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளதால், ஜியோ பயனர்கள் பிஎஸ்என்எல்லின் திட்டத்திற்கு மாறிவிடலாம்.


பிஎஸ்என்எல்லின் ரீசார்ஜ் திட்டங்கள் மிகவும் மலிவானவை, இதில் நல்ல சலுகைகளையும் பெறுவீர்கள். மலிவான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே என பலரும் கூறுகின்றனர்.


பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்


336 நாள் திட்டம்


பிஎஸ்என்எல்லின் மூன்று நீண்ட கால திட்டங்களில், ஒரு திட்டம் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.1499 திட்டம் ஆகும். இதில் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம். இது தவிர, முழு 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் 24 ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கும். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் செய்யலாம். ஃபோனை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ஓராண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம் கட்டினால் போதும்.


மேலும் படிக்க | Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!


பிஎஸ்என்எல்லின் 365 நாள் திட்டம்


இந்தத் திட்டத்தை முழு ஆண்டு ரீசார்ஜ் திட்டம் என்றும் அழைக்கலாம், ஏனெனில் இதன் வேலிடிட்டி 365 நாட்கள் மற்றும் இதன் விலை ரூ.1999 மட்டுமே. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ரீசார்ஜ் என்பதால், எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த திட்டத்தில் 356 நாட்களுக்கு 600ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டு முழுவதும் இணையத்தை பயன்படுத்தலாம். இது தவிர, 30 நாட்களுக்கு இலவச BSNL ட்யூன்களையும் தினமும் 100 SMSகளையும் பெறுவீர்கள்.


ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா திட்டம்


இந்த திட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் திட்டம் ஆகும், இதன் வேலிடிட்டி 395 நாட்கள் இருக்கும். கட்டணம் ரூ.2399 மட்டுமே. இந்த திட்டத்தில், ஒரு வருடத்திற்கு மேல் பணம் செலவழிக்காமல் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம். அனைத்து ரீசார்ஜ் பிளான்களிலும் இந்த திட்டம் மிகவும் சிக்கனமானது. இது தவிர, தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும், அதாவது சுமார் 13 மாதங்களுக்கு டேட்டா இருக்கும்.


சமீபத்திய ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிப்பினால் ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில், பிஎஸ்என்எல்லின் இந்தத் திட்டங்கள் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ... ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ