Jio, Airtel-க்கு போட்டியாக புதிய திட்டத்துடன் களமிறங்கும் BSNL!
அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இதற்கு முன்பு ரூ .1699 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நீண்ட கால திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தற்போது கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இதற்கு முன்பு ரூ .1699 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நீண்ட கால திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தற்போது கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் போட்டி காரணமாக தற்போது இந்த திட்டத்தில், நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் நடப்பு திட்டத்தை விட கூடுதல் இரண்டு மாதங்களை பெறுவர். எனினும் இந்த நன்மைகளை பெற நுகர்வோர் இந்த ரீசார்ஜினை இந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், நுகர்வோருக்கு ரூ .365 நாட்கள் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மாற்றங்களின் படி இந்த மாதம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் 425 நாட்களுக்கு செல்லுபடியாகும். இவற்றில், தரவு, அழைப்பு மற்றும் SMS சலுகைகள் போன்றவையும் வழங்கப்படலாம்.
Whatsapp Dark Mode-னை எவ்வாறு உங்கள் கணினியில் இயக்குவது?
BSNL 1699 ரூபாய் திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி தரவு நுகர்வோருக்கு வழங்கப்படும். மேலும், அழைப்பதற்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 SMS வழங்கப்படும். புதிய சலுகையின் கீழ், நுகர்வோருக்கு 2 ஜிபி தரவுக்கு பதிலாக ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவு வழங்கப்படும். இந்த நன்மை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிடைக்கும். இதற்காக, நுகர்வோர் நவம்பர் 30-க்கு முன்பு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
BSNL-ன் நீண்டகால திட்டத்தில் பெரும்பாலான தரவு கிடைக்கும்: மற்ற நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, BSNL-ன் இந்த திட்டத்தில் அதிகபட்ச தரவு வழங்கப்படுகிறது. ஜியோ தனது நீண்ட கால திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி தரவையும் வழங்குகிறது. இதனுடன், ஏர்டெல் தனது நீண்ட கால திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.4 ஜிபி தரவையும் அளிக்கிறது. BSNL திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவு நுகர்வோருக்கு வழங்கப்படும். அதாவது, மொத்தம் 1275 ஜிபி தரவு நுகர்வோருக்கு அளிக்கப்படும்.
விரைவில் மாறுகிறது facebook லோகோ, காரணம் என்ன தெரியுமா?
ஏர்டெல் மற்றும் ஜியோ BSNL விட குறைவான தரவை வழங்குகின்றன, ஆனால் பல இலவச சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பிட்டு பார்க்கையில், Jio பயனர்களுக்கு Jio பயன்பாடுகளுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஏர்டெல் விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், நார்டன் மொபைல் செக்யூரிட்டி மற்றும் ஷா அகாடமி ஆகியவற்றிற்கான அணுகல் 4 வாரங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுப்போன்ற சலுகைகள் BSNL-ல் இல்லை என்றபோதிலும், தற்போது அறிவ்விக்கப்பட்டு கூடுதல் சலுகைகள் தங்கள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வரும் நம்பப்படுகிறது.