BSNL ... ஒரு மாத கூடுதல் வேலிடிட்டியுடன்... 60GB அதிக டேட்டா.. ஜனவரி 16 வரை மட்டுமே வாய்ப்பு
BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2025 புத்தாண்டில், BSNL அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றில் அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இப்போது நீங்கள் வருடாந்திர திட்டத்தில் 12 மாதங்கள் வேலிடிட்டி உள்ள நிலையில், இப்போது உங்களுக்கு திட்டத்தில் 14 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதனுடன், நீங்கள் முன்பை விட அதிக டேட்டாவைப் பெறுவீர்கள். கூடுதல் வேலிடிட்டி மற்றும் எக்ஸ்ட்ரா டேட்டாவிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறுவனம் எந்த கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என்பது சிறப்பு.
BSNL வழங்கும் குறிப்பிட்ட கால சலுகை
BSNL வழங்கும் ரூ.2399 என்ற சிறந்த திட்டம் உள்ளது. வழக்கமாக, இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 395 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் ஆனால் இப்போது புத்தாண்டு சலுகையாக அதன் வேலிடிட்டி ஒரு மாத காலத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நீங்கள் இப்போது வாங்கினால், 395 நாட்களுக்குப் பதிலாக 425 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டாவின் பலனை பெற ஜனவரி 16 வரை மட்டுமே வாய்ப்பு.
BSNL வழங்கும் மலிவான திட்டத்தின் நன்மைகள்
BSNL இன் ரூ.2399 திட்டத்தை ஜனவரி 16க்கு பிறகு வாங்கினால், 395 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். 2399 ரூபாய்க்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற இலவச அழைப்புடன் தினமும் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். சலுகையுடன் முழு வேலிடிட்டி பெறும் போது நீங்கள் மொத்தம் 850 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறலாம். நீங்கள் திட்டத்தை வாங்கினால், இலவச அழைப்பு, 2 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய்க்கு பெறலாம்.
மேலும் படிக்க | வசதிகளை வாரி வழங்கும் வோடபோன் ஐடியா... ஒரு வருஷத்திற்கு உங்களுக்கு கவலையே வேணாம்!
அதிகரித்து வரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல்லின் நுகர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டிசம்பர் 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்என்எல் கடந்த அக்டோபர் மாதத்தில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ