MTNL உடன் இணைவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை BSNL தற்போது அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த VRS சலுகை அறிவிப்பு வரும் டிசம்பர் 3 வரை செல்லுபடியாகும் எனவும், இதன் மூலம் சுமார் ரூ .7,000 கோடியை ஊதிய மசோதாவில் சேமிக்க இயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


BSNL-ன் இந்த VRS திட்டத்தினை 70,000-80,000 ஊழியர்கள் தேர்வு செய்வார்கள் என்று பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) எதிர்பார்க்கிறது என்று தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி.கே.புர்வார் மேற்கோளிட்டுள்ளார். தன்னார்வ ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்யும் ஊழியர்களுக்கு, நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் 35 நாட்கள் சம்பளமும், ஒவ்வொரு ஆண்டும் சேவைக்கு 25 நாட்கள் சம்பளமும் அளிக்கப்படும்.


'BSNL தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் - 2019'-ன் படி, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து வழக்கமான மற்றும் நிரந்தர BSNL ஊழியர்களுக்கு பொருந்தும். அந்த வகையில் அதன் மொத்த ஊழியர்களில் 1.50 லட்சம் பேர் VRS திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


நோய்வாய்ப்பட்ட இரண்டு அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக BSNL நிறுவனத்தை மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (MTNL) உடன் இணைக்க அக்டோபர் 23 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், BSNL மற்றும் MTNL புதுப்பிக்க ரூ.29,937 கோடியை வைக்கவும், அத்துடன் இருநிறுவன சொத்துக்கள் ரூ .38,000 கோடி பணமாக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


இதனுடன், VRS சலுகைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது, அதற்கான செலவை பட்ஜெட் ஆதரவு மூலம் மத்திய அரசு ஏற்கும் எனவும் அறிவித்துள்ளது. 20,140 கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதலால் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்க அரசு சமீபத்ததில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஸ்பெக்ட்ரத்திற்கான GST-யை ரூ .3,674 கோடி, இந்திய பட்ஜெட் வளங்கள் மூலம் இந்திய அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. கூடுதலாக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக ரூ .15,000 கோடி இறையாண்மை பத்திரத்தை திரட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.