பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 769-க்கான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. பிஎஸ்என்எல்-ன் இந்த 769 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் திட்டம்: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் கிடைக்கின்றன. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு ஈடான வசதிகள்
பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்த திட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றது. மிகக்குறைந்த விலையில், பல வித நன்மைகளை அளிக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஎஸ்என்எல்: ரூ. 769 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 769-க்கான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. பிஎஸ்என்எல்-ன் இந்த 769 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் திட்டம்: வேலிடிட்டி என்ன?
பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கான வேலிடிட்டி, அதாவது செல்லுபடி காலம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அன்லிமிடெட் டேட்டா.. அன்லிமிடெட் அழைப்பு.. வெறும் 398 ரூ.பாய் -BSNL சூப்பர் ப்ளான்
பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகள் என்ன?
இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் அதாவது வாய்ஸ் கால் வசதி கிடைக்கிறது. இதனுடன் வரம்பற்ற தரவு வசதி இத்திட்டத்தில் உள்ளது. 2GB/day ஆனவுடன் வேகம் 40Kbps ஆக குறையும். பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், EROS Now, M/s ONE97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடட் வழங்கும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ், M/s Onmobile Global Ltd வழங்கும் ப்ரோக்ரெசிவ் வெப் ஆப் (Progressive Web App(PWA))-ல் சேலஞ்சஸ் அரேனா மொபைல் கேமிங் சர்வீஸ், M/s Tellyfonic Digital Media வழங்கும் "Lystn" மியூசிக் சர்வீஸ், லோக்துன், ஜிங், ஆஸ்ட்ரோடெல், M/s Ubarri Marketing Private Limited வழங்கும் கேம்ஆன் சர்வீசஸ், M/sADVYSORS INC வழங்கும் GAMEIUM ப்ரீமியம் கேமிங் அப்ளிகேஷன் ஆகிய அம்சங்கள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல், அதாவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் நிறுவனம் பல வித அம்சங்களைக் கொண்ட பல மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்கிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | BSNL சூப்பர் திட்டம்! செட்-டாப் பாக்ஸ் இல்லாமல் 1000 சேனல்களை இலவசமாக பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ