வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி குடுத்த BSNL! இனி இந்த திட்டம் இல்லை!

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மலிவு திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் லட்சத்தீவு யூடி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது.   

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2023, 10:29 AM IST
  • BSNL இந்தியாவின் மிகப்பெரிய இணைய சேவை வழங்குநர்களில் ஒன்று.
  • தற்போது மலிவுத் திட்டத்தை வழங்குவதில் இருந்து நீக்கியுள்ளது.
  • BSNL பல OTT பிராட்பேண்ட் திட்டங்களையும் வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி குடுத்த BSNL! இனி இந்த திட்டம் இல்லை! title=

இந்தியாவின் மிகப்பெரிய இணைய சேவை வழங்குனர்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் வழங்கி வந்த திட்டத்தை இப்போது நீக்கியுள்ளது.  பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.329 விலையில் 20 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 1டிபி  டேட்டாவை வழங்கி வந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளது.  உங்களது அன்றைய நாளுக்கான டேட்டா வரம்பு குறைந்தவுடன் இணையத்தின் வேகம் வேகம் 2 எம்பிபிஎஸ் ஆக குறைந்துவிடும். மலிவான விலையில் சிறந்த வசதியை கொடுத்த இந்த திட்டம் இப்போது இந்தியாவிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் யாருக்கும் கிடைக்கவில்லை.  பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் லட்சத்தீவு யூடி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது.  ஆனால் இப்போது இந்த திட்டம் நாட்டின் எந்த நகரங்களிலும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்

பிஎஸ்என்எல் இதுவரை வழங்கி வந்த ரூ.399 வாடிக்கையாளர்களுக்கு 1டிபி டேட்டாவுடன் 30 எம்பிபிஎஸ் வேகத்தைப் பெறுகிறார்கள்.  நீங்கள் 1டிபி டேட்டாவை பயன்படுத்தியது இணையத்தின் வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக குறைகிறது.  இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.  ரூ.399 திட்டத்தை தொடர்ந்து உங்களுக்கு பிஎஸ்என்எல் ரூ.449 விலையில் மற்றொரு திட்டத்தையும் வழங்குகிறது.  இந்த திட்டத்திலும் உங்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகம் வழங்கப்படுகிறது மற்றும் இதில் உங்களுக்கு 3.3டிபி டேட்டா வழங்கப்படுகிறது.  அதிக இணைய வேகத்தை பெற விரும்பினால், நீங்கள் ரூ.499 திட்டத்தை தேர்வு செய்யலாம், இது உங்களுக்கு 3.3டிபி டேட்டாவுடன் 40 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது.

​​ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ.399 திட்டத்தை வழங்குகிறது.  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பல ஓடிடி பிராட்பேண்ட் திட்டங்களையும் வழங்குகிறது, ஓடிடி சலுகைகளை பெற ரூ.799 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.  பிஎஸ்என்எல் ஓடிடி OTT திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ் போன்றவை பெறலாம்.  இந்த ஆண்டு மார்ச் 31 வரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் இணைப்பை பெறலாம். ஃபைபர் பேசிக் பிளஸ், ஃபைபர் வேல்யூ, சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ், ஃபைபர் பிரீமியம் பிளஸ் ஓடிடி நன்மைகளுடன் நீங்கள் பிஎஸ்என்எல்-லிருந்து இலவச ஒற்றை-பேண்ட் வைஃபை ரவுட்டரைப் பெறலாம்.

மேலும் படிக்க | Flipkart Big Saving Days 2023: அட நிஜம்தான், நம்புங்க!! ரூ.60,000 ஐபோனின் விலை வெறும் ரூ. 18,000

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News