பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் மற்றும் ஆண்டு முழுவதும் பயன்பெரும் வகையில் சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி இன்று நாங்கள் உங்களுக்காக அத்தகைய சிறப்பான மலிவான மற்றும் நல்ல ரீசார்ஜ் திட்டத்தை பற்றி தான் கொண்டு வந்துள்ளோம். அதன் விலை ரூ.599 ஆகும். BSNL அதன் பயனர்களுக்கு பலவிதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பல சிறந்த மற்றும் மலிவான திட்டங்கள் கிடைக்கின்றன. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தில் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் உள்ளிட்ட அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் MTNL வட்டங்களிலும் வேலை செய்கிறது. மேலும் இந்த திட்டத்தில் முழு 84 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். இந்நிலையில், இதில் சிறப்பு என்னவென்றால் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.7 மட்டுமே இதற்காக செலவழிக்க வேண்டும்.


மேலும் படிக்க |  Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இப்படி செய்தால் சிறை தண்டனை


BSNL இன் இந்த திட்டம் அதன் வரம்பில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது. இதில் 84 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகும், BSNL வாடிக்கையாளர்கள் 40 Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை தருகிறது, அதன்படி இதைப் பயன்படுத்தி ஈமெயில் மற்றும் உடனடி செய்தி போன்ற அவசரத் தகவல்களுக்குப் பயன்படுத்தலாம். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வரம்பற்ற டேட்டாவைப் பெறுகிறார்கள்.


அதேபோல் இந்த டேட்டா திட்டத்தில் கிடைக்கும் 3 ஜிபி தினசரி டேட்டா வரம்பை இது பாதிக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெகுநேரம் வரை விழித்திருந்தால், இந்த இரவு அன்லிமிடெட் டேட்டா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலிங் மற்றும் SMS போன்ற அம்சங்களைத் தவிர, BSNL 599 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு இலவச BSNL ட்யூன்ஸ், Zing Music, Astrotel மற்றும் GameOn சேவைகளையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | அரசு போர்டல்களில் சாட்போட் வசதி.. பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ