Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இப்படி செய்தால் சிறை தண்டனை

Netflix Rules: நீங்களும் உங்கள் லாக் இன் விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நபராக இருந்தால், இதற்காக சிறை செல்ல நேரிடலாம் என்ற தகவல் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2023, 09:33 AM IST
  • நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் பொழுதுபோக்கிற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கின்றன.
  • ஆனால் இப்போது இந்த பொழுதுபோக்கு அம்சத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபத்து.
  • நீங்கள் சிறை செல்ல நேரிடலாம்.
Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இப்படி செய்தால் சிறை தண்டனை title=

Netflix விதிகள்: சமீப காலங்களில் ஓடிடி தளங்கள் மக்களிடையே அதிக அளவில் பிரபலமாகிவிட்டன. பல வித ஓடிடி தளங்களில் மக்கள் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பழைய தொலைக்காட்சித் தொடர்கள் என பல வித நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறார்கள். இந்த ஓடிடி தளங்களில் நெட்ஃப்ளிக்ஸ் ஒரு மிக பிரபலமான ஓடிடி தளமாகும். நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் பொழுதுபோக்கிற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கின்றன. ஆனால் இப்போது இந்த பொழுதுபோக்கு அம்சத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வது உங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அனுப்பக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மேக்ஸ்எக்ஸ் -இன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் அதைப் பயன்படுத்துவதால் நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நெட்ஃபிக்ஸ் பயனர்கள் தங்கள் ஐடி-பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

அது நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்களும் உங்கள் லாக் இன் விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நபராக இருந்தால், இதற்காக சிறை செல்ல நேரிடலாம் என்ற தகவல் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். 

மேலும் படிக்க | அரசு போர்டல்களில் சாட்போட் வசதி.. பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில்கள்!

பாஸ்வர்ட்டை பகிர்வது குற்றமாக கருதப்படும்

நீங்கள் இப்போது உங்கள் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கின் கடவுச்சொல் அதாவது பாஸ்வர்டை யாருடனும் பகிர்ந்து கொண்டால், அவ்வாறு செய்வது உங்களை சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளக்கூடும். ஏனெனில், அவ்வாறு செய்வது இப்போது மோசடி வகையின் கீழ் வந்துவிட்டது. இனி அப்படி செய்வது குற்றமாக கருதப்படும், இதற்காக நீங்கள் சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 

கடந்த சில ஆண்டுகளாக, கடவுச்சொற்களைப் பகிரும் போக்கு மக்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் ஒரு கணக்கிற்கு குழுசேர்கிறார்கள் மற்றும் நான்கைந்து பேர் அந்தக் கணக்கிலிருந்து திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். ஆனால் இனி அவ்வாறு செய்ய முடியாது. 

சமீபத்தில், அரசாங்கத்தின் அறிவுசார் சொத்து அலுவலகம் (இண்டெலக்சுவல் ப்ராபர்டி ஆஃபிஸ்) பைரசி தொடர்பான புதிய வழிகாட்டுதலைத் தயாரித்துள்ளது. அதன்படி, பயனர்கள் ஓடிடி தளங்களின் கடவுச்சொல்லை யாருடனும் பகிர்ந்து கொண்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த விதி நெட்ஃப்ளிக்ஸ்ஸுக்கு மட்டுமல்ல. மாறாக, சந்தையில் உள்ள அனைத்து ஓடிடி இயங்குதளங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். இந்த விதி இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும், இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 27,499க்கு கிடைக்கும் 43,999 ரூபாய் விலை Google Pixel 6a போன்! ஃபிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News