BSNL ரூ 19 திட்டம் அறிமுகம்: திணறிப்போன மற்ற நிறுவனங்கள்
BSNL Rs 19 monthly recharge plan: BSNL குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை தங்கள் பயனர்களுக்கு பல மலிவு திட்டங்களை வழங்குகின்றன. குறைந்த செலவில் அதிக நன்மைகளை வழங்குவதற்காக இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்கள் இடையே பிரபலமாக உள்ளன. கடந்த ஆண்டு, மூன்று நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், மலிவான விலையில் வழங்கப்பட்ட திட்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தற்போது பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்...
பிஎஸ்என்எல் 19 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் இன் ரூ.19 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது முழு மாத வேலிடிட்டி அதாவது 30 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரூ.19 ரீசார்ஜ் செய்த பிறகு, அழைப்பு கட்டணம் 20 பைசாவாக குறைகிறது. இந்த திட்டத்தை எடுத்த பிறகு, நீங்கள் வேறு எந்த ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கவலைப்படாமல் மாதம் முழுவதும் காலிங்க் செய்துக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் இல் இதற்குப் பிறகு வரும் மலிவான திட்டம் எது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன
பிஎஸ்என்எல் 75 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் இன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மிகவும் பிரபலமானது, இது பயனர்களால் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில், மாதம் முழுவதும் நீங்கள் 200 நிமிடங்கள் பெறுவீர்கள். அத்துடன் நீங்கள் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பை இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜில் மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டம் அழைப்பு மற்றும் டேட்டாவிற்கு சிறந்தது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது என்பதை குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 147 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் 147 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்திட்டமும் மாதம் அடிப்படையில் வரும் திட்டமாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கலிங்க மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை நீங்கள் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். மேலும் இதில் நீங்கள் ஒட்டுமொத்தமாக 10ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். அத்துடன் இலவச பிஎஸ்என்எல் டியூன்களும் இதில் கிடைக்கும். பயனர்களிடையே அதிகம் விற்பனையாகும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; ₹699 விலையில் Nokia Smart TV!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ