Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன

விரிசல் அடைந்த மொபைல் திரையை செலவில்லாமல் வீடிலேயே சரி செய்து கொள்ளலாம் என சில டிப்ஸ்களை இணைய தளத்தில் காணலாம். இதனை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறதா... 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2022, 10:48 AM IST
  • விரிசல் அடைந்த தொலைபேசி திரையை நாமே வீட்டில் சரி செய்வதில் உள்ள ஆபத்துக்கள்.
  • சிறு விரிசல் விழுந்து விட்டாலும் அதனை சரி செய்வதற்கு அதிக பணம் செலவாகும்.
  • சில டிப்ஸ்களை இணைய தளத்தில் காணலாம்.
Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன title=

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.  பெரும்பாலானவற்றின் விலையும் அதிகம். சிறு விரிசல் விழுந்து விட்டாலும் அதனை சரி செய்வதற்கு அதிக பணம் செலவாகும்.  நம் கைகளில் இருந்து போன் தவறி விழுந்தாலோ அல்லது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்தாலோ,  ஏற்படும் சிறிய விரிசலுக்கும் அதிக பணம் செலவழிகக் வேண்டிய  கட்டாயம் ஏற்படுகிறது. எனினும் இதனை செலவில்லாமல் வீடிலேயே சரி செய்து கொள்ளலாம் என சில டிப்ஸ்களை இணைய தளத்தில் காணலாம். இதனை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறதா... 

வீட்டில் இருந்த படியே, உங்கள் ஃபோன் திரையை சரிசெய்ய விரும்புபவர்களுக்கு, பற்பசை என்னும் டூத்பேஸ்ட் மற்றும் நெயில் பாலிஷ்  கை கொடுக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.  பற்பசை அல்லது நெயில் பாலிஷ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்க்ரீன் மற்றும் ஐபோன் ஸ்க்ரீன் இரண்டையும் சரி செய்யும் ஆற்றலை கொண்டுள்ளது என்கின்றனர். அதனை பயன்படுத்தும் முறையும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம், இன்னும் பல நன்மைகள்

பற்பசையை பயன்படுத்தும் முறை:

பற்பசையை திரையின் விரிசல் பகுதியில் தடவவும்.
அதை மெதுவாக தேய்த்து, சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான பருத்தியைப் பயன்படுத்தி அதை துடைக்கவும்.

இருப்பினும், உங்கள் ஃபோன் திரையை பற்பசை மூலம் சுத்தம் செய்வதன் மூலம் உங்கள் ஃபோன் திரையில் உள்ள அனைத்து விரிசல்களையும் அகற்ற முடியாது, ஆனால் விரிசல் ஏற்பட்ட பகுதியை ஓரளவு சரி செய்யும். இருப்பினும், இதனை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. தொலைபேசி திரை ஒரு நுட்பமான பகுதியாகும். விரிசல் ஏற்பட்ட இடத்தை நீங்களே சரிசெய்ய போய், உங்கள் ஃபோன் திரையை முழுவதுமாக சேதப்படுத்தி விடக் கூடாது. எனவே உங்கள் மொபைலில் விரிசல் ஏற்பட்டால், எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், கூடுதல் கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நெயில் பாலிஷ் பயன்படுத்தும் முறை

வீட்டிலேயே விரிசல் அடைந்த தொலைபேசி திரையை சரி செய்ய நெயில் பாலிஷை பயன்படுத்தலாம்.
விரிசல் ஏற்பட்ட இடத்தில் நெயில் பாலிஷை தடவவும்.
சில நிமிடங்கள் உலர அனுமதிக்கவும்.
கூர்மையான ரேஸர் பிளேடுடன் உலர்ந்த பாலிஷை ஸ்கிராப் செய்யவும்.

மொபைலைப் பாதுகாக்க ஸ்க்ரீன் பிரொடெக்டரை பயன்படுத்தவும்

கிராக் செய்யப்பட்ட ஃபோன் திரையை சரிசெய்ய போதுமான பணம் இல்லை என்றால்,  ஃபோன் திரையைப் பாதுகாக்க ஸ்கிரீன் ப்ரொடெக்டரைப் பயன்படுத்துவது தற்காலிகத் தீர்வாகும். இதன் மூலம் கிராக் ஆன தொலைபேசி திரை மூலம் தூசி அல்லது நீர்  உள்ளேநுழைந்து சேதமாவதைத் தடுக்கலாம்.

விரிசல் அடைந்த தொலைபேசி திரையை நாமே வீட்டில் சரி செய்வதில் உள்ள ஆபத்துக்கள்

பொதுவாக திரை விரிசல்களை சரிசெய்வதில் ஈடுபடுவது தவறானது. உங்கள் ஃபோன் திரையை வீட்டிலேயே  சரி செய்ய முயற்சிப்பதால், அது உங்களுக்கு பாதகமாக கூட ஆகலாம். விரிசல் விழுந்த தொலைபேசித் திரையை திரவப் பொருளால் சரிசெய்யும் போது, அது சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் ஆபத்தாகி விடும். கஸ்கிரீனில் விரிசல் விழுந்தால், ​​நாமே அதனை கையாளவதை விட, நீங்கள் ஒரு தொழில் முறையிலான மொபைல் பழுது பார்ப்பவரை அணுகுவதே சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News