BSNL vs Jio: பிஎஸ்என்எல், ஜியோ போட்டி; எந்த பிளான் பெஸ்ட்
BSNL vs Jio: பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு அசத்தலான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தற்போது BSNL இன் இந்த திட்டம் ஜியோவின் ரூ .247 திட்டத்துடன் போட்டியிடுகிறது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டத்தில், பயனர்கள் ஜியோவை விட அதிகமான தரவைப் பெறுகின்றனர். இந்த இரண்டு திட்டத்தில் எது சூப்பரானது என்று பார்போம்.
BSNL vs Jio: ஜியோ சமீபத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் எந்த FUP வரம்பும் இல்லாமல் வருகிறது. கொரோனா காலத்தில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான மலிவான திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், DATA முதல் தொடங்கி காலிங்க, மெசேஜ் என பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன.
BSNL vs Jio
பிஎஸ்என்எல் ரூ.151 ரீசார்ஜ் திட்டம்
பி.எஸ்.என்.எல் (BSNL Plan) என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ரூ.151 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்திற்கு டேட்டா நன்மைகளை வழங்குகின்றன. பிஎஸ்என்எல் டபிள்யூஎஃப்ஹெச் டேட்டா எஸ்.டி.வி.களில் இருந்து தொடங்கி ரூ.151 ப்ரீபெய்ட் திட்டமானது 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ALSO READ | Best Broadband Plans: 100Mbps வேகம், வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் அசத்தலான திட்டங்கள்
ஜியோ ரூ.247 ரீசார்ஜ் திட்டம்
ஜியோ (Reliance Jio) ரூ.247 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் டெய்லி FUP வரம்பு இன்றி 25 ஜிபி டேட்டாவை யூஸர்களுக்கு அளிக்கிறது. இதில் 100 SMS மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஜியோவின் தகவல் மற்றும் பயன்பாடுகளுக்கான ஜியோ ஆப்ஸ்களுக்கு ஃப்ரீ அக்சஸ் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன.
இருப்பினும், பிஎஸ்என்எல்லின் திட்டம் ஜியோவை விட மிகவும் மலிவானது, இதில் நீங்கள் Talktime மற்றும் எஸ்எம்எஸ் வசதியை பெறலாம். இது தவிர, பிஎஸ்என்எல் திட்டத்தில், பயனர்கள் ஜியோவை விட அதிகமான தரவைப் பெறுகின்றனர். பயனர்கள் தரவை மட்டுமே விரும்பினால், அவர்கள் பிஎஸ்என்எல்லின் ரூ .251 திட்டத்தை வாங்கலாம், இதில் 70 ஜிபி தரவு 28 நாட்களுக்கு கிடைக்கிறது.
ALSO READ | Vodafone-Idea Prepaid Plans: அசத்தல் சலுகை, Vi யின் டபுள் டேட்டா பிளான் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR