itel ColorPro 5G அறிமுகம்: இந்திய சந்தையில் கலர் மாறும் ஸ்மார்ட்போன் (Color Changing Smartphone) மாடலை ஐடெல் நிறுவனம் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யதுள்ளது. இதன் விலை ரூ.9,999 மட்டுமே. பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் புதிய 5ஜி மொபைலை வாங்க ஐடெல் நிறுவனத்தின் புதிய நிறம் மாறும் ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5G ஸ்மார்ட்போன் ரூ.10,000 வரை பட்ஜெட்டில் எளிதாகக் கிடைக்கிறது, ஆனால் இந்த பட்ஜெட்டில் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய ColorPro 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், வண்ணத்தை மாற்றும் பேக் பேனல் இதில் உள்ளது. இது தவிர, இந்த ஃபோன் 12 ஜிபி ரேம் சேமிப்பகத்தை கொண்டுள்ளது.


லாவெண்டர் பேண்டஸி மற்றும் ரிவர் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த ஐடெல் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம். இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் IVCO தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீது சூரிய வெளிச்சம் படும் போது, அதன் நிறம் மாறிவிடும் இதேபோன்ற கலர் மாறும் தொழில்நுட்பம் இதற்கு முன்னதாக Vivo மற்றும் Oppo போன்ற பிராண்டட் போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.


குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.


இந்தியாவில் itel ColorPro 5G விலை


ஐடெல் நிறுவனத்தி ந் நிறம் மாறும் 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999. இந்த விலையில் இந்த கைபேசியின் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் கிடைக்கும். ]மேலும் இதில்1 வருட காலத்திற்கு இலவச திரை மாற்று உத்தரவாதத்தை வழங்குகிறது.


மேலும் படிக்க | BSNL வழங்கும் ரூ.300-க்கும் குறைவான ப்ரீபெய்ட் பிளான்கள்... போர்ட் செய்வது எப்படி..!!


itel ColorPro 5G போனில் உள்ள அமசங்கள்


டிஸ்ப்ளே: itel ColorPro 5G ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது.


செயலி: துரிதமாக செயல்பட ஏதுவாக மீடியாடெக் டைமன்ஷன் 6080 ஆக்டா கோர் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது.


பேட்டரி திறன்: 18 வாட் வேகமான சார்ஜிங் திறனை ஆதரிக்கும், 5000 mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.


கேமரா அமைப்பு: 50 மெகாபிக்சல் AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கு போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.


ரேம்: போனில் 6 ஜிபி ரேம் உள்ளது. இருப்பினும் ஜிபி விர்ச்சுவல் ரேம் மூலம் ரேமை 12 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.



மேலும் படிக்க | சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை... அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ