OnePlus போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி.. அமேசான் வழங்கும் அசத்தல் ஆஃபர்..!!

ஐபோனுக்கு இணையாக அதிக விரும்பப்படும் பிராண்டுகளின் ஒன்றான OnePlus போனின் பல பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அமேசானில் பம்பர் தள்ளுபடி சலுகைகளுடன்  கிடைக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 14, 2024, 05:57 PM IST
  • விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கிறது.
  • தொலைபேசியின் பேட்டரி 5500mAh திறன் கொண்டது.
  • போனில் 48MP SONY LYT-T800 முதன்மை கேமரா உள்ளது.
OnePlus போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி.. அமேசான் வழங்கும் அசத்தல் ஆஃபர்..!! title=

ஐபோனுக்கு இணையாக அதிக விரும்பப்படும் பிராண்டுகளின் ஒன்றான OnePlus போனின் பல பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அமேசானில் பம்பர் தள்ளுபடி சலுகைகளுடன்  கிடைக்கின்றன. நீங்கள் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த டீல்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அமேசான் சலுகை விற்பனையில், ​​இந்த விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. எக்ஸ்சேஞ் ஆஃபர் மற்றும் சிறப்பு தள்ளுபடி கூப்பன்களையும் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R)

OnePlus 12R போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் அமேசானில் ரூ.39,998 என்ற விலை கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி அட்டை மூலம் போனிற்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இது தவிர ரூ.2000 தள்ளுபடி கூப்பனும் தனியாக கிடைக்கும். இதுமட்டுமின்றி பழைய போனுக்கு மாற்றாக எக்ஸ்சேஞ் செய்வதற்கு ரூ.26,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஃபோன்னில், 1.5K டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க, இது 50MP SONY IMX890 முதன்மை கேமராவை உள்ளது. தொலைபேசியின் பேட்டரி 5500mAh திறன் கொண்டது. இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 12 (OnePlus 12)

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனை அமேசானில் ரூ.64,999க்கு வாங்கலாம். மேலும், HDFC வங்கி கார்டு மூலம் போனில் ரூ.7,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி பழைய போனை கொடுத்து வாங்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் இந்த போனில் ரூ.26,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஃபோனில் 2K டிஸ்ப்ளே உள்ளது.  Qualcomm Snapdragon 8 Gen 3 செயலி பொருத்தப்பட்டுள்ள இந்த போனில், புகைப்படம் எடுப்பதற்கு, இது 50MP SONY LYT-800 முதன்மை கேமரா உள்ளது. இதில், 64MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 48MP அல்ட்ரா-வைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் பேட்டரி  திறன் 5400mAh. இதில் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கிறது.

மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!

ஒன்பிளஸ் ஓபன் (Oneplus Open)

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலை அமேசானிலிருந்து ரூ.1,39,999க்கு வாங்கலாம். இது தவிர, HDFC வங்கி கார்டு மூலம் போனில் ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகையும் கிடைக்கிறது. இது தவிர, பழைய போனை எக்ஸ்சேன்ஞ்  செய்வதால் இந்த போனிற்கு ரூ.26,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.  இதில், முதன்மை டிஸ்ப்ளே 7.82 இன்ச், கவர் 6.31 இன்ச் டிஸ்ப்ளே என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டது. இது தவிர, போனில் 48MP SONY LYT-T800 முதன்மை கேமரா உள்ளது. இதில் 64MP இரண்டாவது கேமிரா மற்றும் 48MP மூன்றாவது கேமரா உள்ளது.

மேலும் படிக்க | ஸ்மார்டாய் ஸ்மார்ட்போன் வாங்க  பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயாரா? டாப் 7 5ஜி போன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News