Union Budget 2021: பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் குறித்து மக்களிடையே அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மொபைல் ஃபோன் துறைக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பதற்கான கோரிக்கையை தொழில்துறை அமைப்பு இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) புதுப்பித்துள்ளது.


2020 மார்ச் மாதத்தில் 50 சதவிகிதம் GST உயர்த்தப்பட்டதை, தங்கள் தொழில்துறைக்கு கிடைத்த ஒரு கொடூரமான அடியாகக் குறிப்பிட்ட ICEA, விகிதத்தை உயர்த்துவதற்காக GST கவுன்சிலுக்கு முன் வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் கருத்துகளும் குறைபாடுடையவையாக இருந்தன என்று கூறியது.


"ஒவ்வொரு இந்தியரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் என்ற இலக்கை அடைவதற்கும், 80 பில்லியன் டாலர் உள்நாட்டு மொபைல் போன் சந்தை என்ற இலக்கை அடைவதற்கும், மொபைல் போன்களில் (Mobile Phone) GST-ஐ 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வேண்டியது அவசியம்" என்று ICEA தலைவர் பங்கஜ் மோஹிந்திரூ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சியின் முக்கிய துறைகளுக்காக பல்வேறு சிறப்பு மையங்களை நிறுவ ரூ .500 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டையும், மொபைல் வடிவமைப்பு மையங்களுக்கு ரூ .200 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டையும் ICEA பரிந்துரைத்தது.


ALSO READ: Budget 2021: Good news, Rs.6000 ஆக இருந்த PM Kisan நிதி Rs.10,000 ஆக உயரக்கூடும்


மற்ற பரிந்துரைகளுடன், ரூ .1000 கோடி வரையிலான கடன்களுக்கு 5 சதவீதம் வட்டி மானியமும் ரூ .100 கோடி கடன் உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும் என தொழில்துறை அமைப்பு கோரியது.


உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளர்களைப் பற்றி, ICEA கூறுகையில், "இந்திய சாம்பியன் நிறுவனங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் அதிக அளவில்  ஆதரவளிக்கிறது. இவை சப் 200 டாலர் நுழைவு நிலை மொபைல் போன் பிரிவில் உலகளாவிய தலைவர்களாக இருக்கக்கூடியவை" என்று கூறியது.


"மத்திய பட்ஜெட்டில் (Union Budget 2021) ரூ .1,000 கோடி ஒதுக்கீட்டில் துவங்கும் ஒரு பட்ஜெட் துவக்கம் திறக்கப்பட வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்திய சாம்பியன் நிறுவனங்கள் ஒரு வலுவான விநியோக சங்கிலியை உருவாக்கும். இந்த முதலீடு நம் தேசத்திற்கு விகிதாசார ஈவுத்தொகையை வழங்கும்" என்று ICEA தெரிவித்துள்ளது.


ICEA-வின் இந்த பரிந்துறைகளை நிதி அமைச்சகம் பரிசீலிக்கும். இதற்கான விளைவு பட்ஜெட்டில் எந்த அளவு தெரிகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வெண்டும்.


ALSO READ: Budget 2021: Good news காத்திருக்கிறது, வரிவிலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR