புதுடெல்லி: BSNL Vs Airtel Vs Vi Vs Jio: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ன் திட்டங்கள் பழைய விலையில் மட்டுமே கிடைக்கும். BSNL தற்போது இதுபோன்ற பல திட்டங்களைக் கொண்டுள்ளது, அவை Airtel மற்றும் Vi திட்டங்களை விட சிறந்தவை. 599 திட்டத்தைப் பற்றி இன்று இங்கே காண உள்ளோம். BSNL இன் இந்த திட்டம் Airtel மற்றும் Vi இன் மற்ற மூன்று திட்டங்களை விட எப்படி சிறந்தது என்பதை தெரிந்துகொள்வோம். ஜியோவிடம் ரூ.599 திட்டமில்லை. ஆனால் ஜியோ ரூ.533 திட்டம். இதன் மூலம் ஜியோவின் ரூ.533 திட்டத்தைப் பற்றியும் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL ரூ 599 திட்டம்
பிஎஸ்என்எல்லின் (BSNL) ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plans), பயனர்கள் ஒவ்வொரு நாளும் 5 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது, அத்துடன் எந்தவொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் காலிங் மற்றும் அன்லிமிட்டட் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அம்சங்களைப் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், Zing பயன்பாட்டின் சந்தா கிடைக்கிறது.


ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்


Airtel ரூ.599 திட்டம்
Airtel இன் ரூ.599 திட்டத்தில் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டம் Disney + Hotstar சந்தாவுடன் வருகிறது. இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் தினமும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், Amazon Prime Mobile Edition இலவச சோதனை, Wink Music மற்றும் இலவச HelloTunes சந்தாவுடன் வருகிறது.


Vi இன் ரூ 599 திட்டம்
Vi (Vodafone Idea) இன் ரூ.599 திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், Binge All Night, Weekend Data Rollover மற்றும் Vi Movies மற்றும் TVக்கான இலவச அணுகல் உள்ளது.


Jio இன் ரூ.533 திட்டம்
ஜியோவிடம் (Reliance Jio) ரூ.599 திட்டமில்லை. ஆனால் அவர்களிடம் ரூ.533 திட்டம் உள்ளது, இது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், பயனர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதனுடன், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.


ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR