ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் குடியரசு தின விற்பனை தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை (Flipkart Republic Day Sale) ஜனவரி 14 முதல் 19 வரை இருக்கும். அமேசான் குடியரசு தின விற்பனை (Amazon Republic Day Sale) 4 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அமேசா விற்பனை 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் வாடிக்கையாளர்கள் இந்த விற்பனைக்காக காத்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தாண்டை கோலாகலமாக துவக்க கோடாக் நிறுவனமும் முனைப்புடன் உள்ளது. கோடாக் நிறுவனம் இந்த விற்பனையில் தனது ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது. இந்த சேலில் Kodak CA Pro மற்றும் QLED தொடர் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான தள்ளுபடிகள் கிடைக்கும்.


Kodak CA PRO தொடரில் சிறந்த தள்ளுபடிகள்


Kodak CA PRO தொடர் சமீபத்திய Android 10 இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது. இது 4k HDR10 டிஸ்ப்ளே, DTS TrueSurround போன்ற வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய பல அம்சங்களைப் பெற்றுள்ளது. இணைப்பிற்காக, இந்த ஸ்மார்ட் டிவி-யில் USB 2.0, HDMI 3 ARC / CEC மற்றும் புளூடூத் v.5.0 ஆகியவற்றின் சமீபத்திய பதிப்பு இருக்கும். இந்தத் தொடரின் ஸ்மார்ட் டிவிகள் பெசல்-லெஸ் ஸ்கிரீன் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உடன் வருகின்றன.


மேலும் படிக்க | Big Saving Days Sale; பிளிப்கார்ட்டில் இந்த போன்களுக்கெல்லாம் மிகப்பெரிய தள்ளுபடி..! 


பெரிய அளவிலான டிவி-யிலும் சலுகை


Kodak Matrix QLED டிவியும் விற்பனையில் கிடைக்கும். இந்தத் தொடர் மூன்று அளவுகளில் வருகிறது (50, 55 மற்றும் 65 அங்குலம்). கூகுள் டிவி இயங்குதளத்துடன், Kodak QLED TVகள் மூன்று அளவுகளில் (50-inch, 55-inch மற்றும் 65-inch) கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.33,999 ஆகும். 


கோடக் டிவி இந்தியாவின் பிரீமியம் பிராண்டாகும். இது கூகுள் டிவியில் க்யூஎல்இடியை அறிமுகப்படுத்தியது. இந்த விற்பனை ஸ்மார்ட் டிவி-யின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 



அனைத்து பண்டிகை காலங்களிலும், சிறப்பு தருணங்களிலும் அனைத்து ஆன்லைன் விற்பனை தளங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளை அள்ளி வீசுகின்றன. வாடிக்கையாளர்களும் இந்த சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அவ்வப்போது சிறந்த வழியில் பயன்டுத்திக்கொள்கின்றன. அந்த வழியில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனைக்காகவும் வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க | ரூ.21 ஆயிரத்துக்கு கிடைக்கும் ஐபோன்..! இந்த ஆஃபர் இனி கிடைக்காது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ